இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
100
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
கட்டி வைத்த வீடு விழுந்து உள்ளிருப்பவன் காலனுலகு செல்கின்றான்! விழுங்கும் சோறு விக்குதலால் பிணமாகின்றான்; தீயால் அழிவு ஏற்படுவதில் வியப்புக்கு என்ன இருக்கிறது? எச்சரிக்கை வேண்டும்; இல்லையேல் இயற்கைக்கு இரையாக வேண்டியதுதான்.
மலைப்பாறை உருண்டு வந்து அழிப்பதைக் குற்றமென அதன் மீது ஏற்றலாமா? ஒதுங்கிக் கொள்ளும் எச்சரிக்கை ல்லாத மனிதப் பாறை மீது குற்றத்தைச் சுமத்தலாமா?
ஒதுங்கிக் கொள்ளமுடியாத இக்கட்டான நிலைமை