இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
152
இளங்குமரனார் தமிழ்வளம் 9
நிலைப்பது ஆறாம் படி! இவ்வனைத்திற்கும் சான்றாக இலங்கிய பெரியோர்கள் அன்றோ-வாராது வந்த மாமணிகளாக லங்குகின்றனர்!
துன்புறுத்தாக் கொள்கை பற்றி வள்ளுவம் என்ன
வகுக்கின்றது?
வள்ளுவத்தின் எப்பகுதியும் துன்புறுத்தும் கொள்கைக்குத் துணைபோவது இல்லை என்பது பொதுவிதி. ஆயினும், சிற்சில குறள்மணிகளோ துன்புறுத்தாக் கொள்கையின் அடித்தளமாக நின்று ஆயிரம் ஆயிரம் ஊழிகளுக்கும் வள்ளுவத்தின் மாண்பைப் பறைசாற்றுவனவாக உள்ளன.
“கறுத்தின்னா செய்தவக் கண்ணும் அவர்நாண செய்யாமை மாசற்றார் கோள்”
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்”
"இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு’
99
"குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்”
க்குறள் மளணிகளை உன்னுக! உன்னுக! உலகங் கடப் பட்டுள்ளதா?இல்லையா?