இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
220
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
நோக்கி அறைகூவுகின்றார். கட்டளையிடுகின்றார்; மன்னர் அல்லவா!
“திருக்குறளை வணங்கட்டும் தலை; வாழ்த்தட்டும் வாய்; நினைக்கட்டும் நெஞ்சு; கேட்கட்டும் செவி.
“வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்நெஞ்சம்
சிந்திக்க கேட்க செவி”
என்பது அவர்தம் அன்புக் கட்டளை!
திருக்குறளைக் கற்போம்; வந்திப்போம். வாழ்த்துவோம்;
நிற்போம்!
வாழ்க வள்ளுவம்!