18
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
மீன் விற்பவள் ஒருத்தி ஒரு நகருக்குச் சென்றாள். மழை நன்றாகப் பிடித்துக் கொண்டது. தன் ஊருக்குத் திரும்ப அவளால் முடியவில்லை. நகரில் இருந்த பூக்கடை ஒன்றில் படுத்திருந்தாள். அவளுக்கு அங்கே இருந்த பூ மணத்தால் உறக்கம் பிடிக்கவில்லை. உறக்க மில்லாமையால் அவள் மிக அல்லல் அடைந்தாள். பின், தன் மீன் கூடை, துணி இவற்றை எடுத்துத் தன் தலைப்பக்கம் வைத்துக் கொண்டு அதன் மணத் திலே உறங்கினாள்! எப்படி மூக்கின் நறுமணப் பயிற்சி?
நினைத்த உடனே நாறுவதுபோல் தெரிகிறது மீன் கூடை; நினைக்கும்போதே மணப்பதாகத் தெரிகிறது பூக் கூடை! ஆனால் அவளுக்கு ஏன் அப்படியாகிவிட்டது?
ஒரு வண்டி; மலம் அள்ளி அதனைக் கொட்டுவதற்குச்
செல்லும் வண்டி! முன்னால் அது போகிறது ; நாம் அருகில் நடக்கிறோம் ; நம்மால் நடக்க
முடிகிறதா? குடரைப் பிடுங்கி எடுப்பது
போல் இல்லையா? ஆனால்
வண்டியில் அமர்ந்து வண்டி ஓட்டுவோர் மகிழ்சியாக வடையும் வாழைப்பழமும் தின்று கொண்டு ஓட்டுவதையும் காண்கிறோம்! அவருக்கு என்ன நாற்றம் அடிக்காதா?