திருக்குறள் கட்டுரைகள்
19
தொடக்கத்தில் நாற்றமாக இருந்திருக்கும்; நம்மைப் போலவே நாற்றத்தால் திணறியிருப்பார் ; பின்னர் பழக்கமாகி விட்டது; நாற்றம் பற்றிய கவலை அவருக்கு இல்லை ! இப்படித் தான் தீய இன்பங்களில் ஈடுபட்டு அழுந்திவிட்டவர்களுக்குத் 'தீமை' பொருட்டாகத் தெரிவதில்லை; மானக்கேடு, பொருட் கேடு, உடற்கேடு இவற்றை நினைவதே இல்லை.
வெளியிடத்தில் இருப்பவனை விளக்குக்கொண்டு தேடிக் காணலாம்; அவனுக்கும் விளக்கொளியைக் காட்டலாம்! நீருள் மூழ்கியிருப்பவனை விளக்குக் கொண்டு எப்படித் தேடிக் காண்பது? அவனுக்கும் காட்டுவது?
சரி, இன்பம் என்பதுதான் என்ன? அவரவர் மன நிலை, பழக்க நிலை, அறிவு நிலை போலெல்லாம் இன்ப நிலை இருக்குமானால் அது உண்மை இன்பம் ஆகுமா?
வாழ நூல்செய்த வள்ளுவரிடம் சென்று "ஐயா, இன்பம் எது?" என்று வினவினால் கூறகின்றார் : "அறத்தான் வருவதே இன்பம்."
66
""
ஐயா, அறமல்லா வழியாலும் அடையும் இன்பம் உண்டே என்றால், "ஆமாம் ; அறத்தின் வழியில் வாராத இன்பம் இன்பம்போல் தோன்றும் ; ஆனால் இன்பம் தருவது இல்லை ; அதனைப் புறத்தே ஒதுக்கித்தள்ள வேண்டும் ; தள்ளாமல் எவனேனும் சிறிதளவு கொள்ள நினைவான் எனினும் தீராப் பழியைத் தந்தே தீரும். அப்பழிவழிப் பக்கம் பாராதே!” என்று விடைதருகிறார்.
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழும் இல.