திருக்குறள் கட்டுரைகள்
வருகை அறிந்து வரவேற்குமா சோலை?
பசியை அறிந்து பரிவுடன் ஊட்டுமா சோலை? உள்ளம் மகிழ இன்னுரையாடுமா சோலை?
21
இத்தனையும் இல்லாச் சோலையினும், இல்லறச் சோலை பல்வழிகளாலும் நல்லின்பம் பயக்கும் அல்லவா! கனிச் சோலைகளில் எல்லாம் கவின் சோலையாக, நற்பூஞ்சோலைகளில் எல்லாம் நறும் பூஞ்சோலையாக, தண்ணிழற் சோலைகளி லெல்லாம் தனிப் பெருஞ் சோலையாகத் திகழ்வது இல் வாழ்வேயாம். இவ்வில்வாழ்வின் தன்மை-பண்பு-என்ன?
இல்வாழ்க்கை என்னும் தங்கத்தைக் கட்டளைக் கல்லில் எத்தனை எத்தனை முறைகளில் எவ்வெவ் வழிகளில் தேய்த்துப் பார்த்தாலும் அன்பு என்னும் குறையில்லா மாற்றையே காண வேண்டும். அன்பு வேறு இல்வாழ்வு வேறு அன்று; இரண்டும் ஒன்றேயாம். அன்பு இல்லா இல்லறம் எத்துணைச் சிறப்புடைய தாயினும் என்னபயன்? அன்பு இல்லா மாந்தர் எவ்வெவ் வழிகளால் பேரும் பெருக்கமும், சீரும் செல்வமும் பெற்றிருந்தும் என்ன பயன்? எல்லாம் வீணே!
அன்பிலார் வாழ்வு உயிர் வாழ்வா? இல்லை! இல்லை! அவர் உடலகத்து உயிர் நின்றிருந்தாலும் அவ்வுடல் எலும்பும் தோலும் போர்த்துக்கட்டிய வெற்றுக்கூடு என்றே கருதப் பெறும். அக்கூட்டில் மூச்சு ஓடிக்கொண்டு இருந்தாலும், அம்மூச்சில் அன்பு உயிர்ப்பு இல்லாமையால், கொற்பட்டறைத் துருத்தி விடும் மூச்சுக்கு இணையாகவே இருக்கும்!
இரண்டு புறாக்கள் பறந்து பறந்து அலுப்படைகின்றன. நிழல் தேடிப் பறக்கின்றன. மேலும் பறக்க முடியாமல் ஒரு மரக்கிளையில் இணையாய் அமர்கின்றன. மரக்கிளையிலோ ஓரிலையும் இல்லை! வெயிலும் தலையை உடைக்கிறது! வெயில் மிகுதியாலும் பறந்து இளைத்ததாலும் வியர்வையைத் தாங்க முடியவில்லை! காற்றும் சிறிதும் அசையவில்லை! என் செய்யும்? இரு புறாக்களுள் ஒன்று பெட்டை; மற்றொன்று ஆண்! பெண் புறாவால் வெப்பக் கொடுமையையும், அதன் விளைவாம் புழுக்கத்தையும், அதன் விளைவாம் வியர்வையையும் தாங்க முடியவில்லை! ஆண் புறாவுக்கு அன்பு இருக்கிறது. அன்பு இருந்தால் போதுமா? போதும்!
அன்பு இருந்தால் போதும் என்றால் அன்பு என்ன நிழல் செய்யும் குடையா? காற்றளிக்கும் விசிறியா? இன்புறுத்தும்