இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
22
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
நன்னீரா ஆமாம்! வை எல்லாமும் அன்புதான்; அன்பு தருவனதான்!
ஆண்புறா பெண்புறாவை நெருங்கிநின்று கழுத்தோடு கழுத்தாக வளைந்து தழுவியது; தன்னிரு சிறகுகளையும் இன்னிழல் செய்யும் நன் பந்தலாக்கியது. ஆக்கியதுடன் மேலும் கீழும் பக்கமும் அசைத்து “இன்காற்று எய்த" விசிறியது. ஆஆ! அன்பு தந்த இன்பம் என்னே!
ஆண் பறவைக்குப் பெண்பறவைமேல் அன்பு! கொடும் புலிக்கும் அதன் குட்டிமேல்அன்பு! யானைக்கும் அதன் கூட்டத் தின் மேல் அன்பு! இத்தகைய அன்பின்
அளவுதான் மனிதனுக்கும் வேண்டுமா?
இவ்வளவில்தான் அன்பு
உண்டானால் மனிதனுக்கும்
பறவைகளுக்கும்
தான் என்ன!
விலங்கு
களுக்கும் உள்ள வேற்றுமை