உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ்வளம் 9

எண்ணம். அது போலவே பேசினால் மட்டும் போதாது, நயன்மிக்க பயன் சொற்களாகக், கேட்டோர், செவியினிக்க, உளம் உவக்க, உணர்வு எழும்பப் பேசவேண்டும் என்பது அவர் திட்டம்.

இத்தகைய எடுத்துக்காட்டான வீட்டிலே ஒருவன் வாழுகின்றான்; தேனருந்த மாட்டாமல் தெய்வத் தாமரை மலரைச் சிதைத்து அழித்து மீனருந்தும் நாரைபோலவாழுகின்றான். எப்படி?

நாட்டிலே கிடைக்கும் நல்ல பழவகைகள் எல்லாம் வீட்டிலே இருக்க விருப்பம்போல் எடுத்துக் கொள்ளும் உரிமை இருக்க, ஊட்டுதற்கும் ஆள் இருக்க அவற்றை உண்ண மறுக்கிறான் என்றால் நாம் அவனைப் பற்றி என்ன நினைக்கலாம்?

அவனே, தோப்புக்குச் சென்று மரத்தில் ஏறிப் பறித்து அதே கனியை உண்டால் என்ன நினைக்கலாம்?

அவனே, நள்ளிருள் போதில் யாரும் அறியா நிலைமையில் அயலார் தோப்பிற்குச் சென்று அதே கனியைத் திருடித் தின்றால் என்ன நினைக்கலாம்?

அவனே, மாரி இரவில் மயங்கு இருள் வேளையில், உச்சமாய் ஓங்கிய மரத்தில் ஏறி, திருட்டுத் தனமாய்க் காயைப் பறித்து புளிக்கும் காயை - உவர்க்கும் காயை - பிஞ்சுக் காயை

-

-

பால் வழியும் காயை

கச்சல் காயை கின்றான் என்றால் என்ன நினைக்கலாம்?

பயந்து பயந்து தின்

மீனருந்தும் நாரை என்று மட்டுமா நயமாகச் சொல்லி நிறுத்துவோம்!

"அவனைப் போலும் அறிவும் பண்பும் இல்லாதவன் உலகில் முன்னும் பிறந்ததும் இல்லை; பின்னும் பிறக்கப் போவதும் இல்லை" என்போம். என்றாலும் நாம் மட்டும் “கனியிருக்கக் காய் கவரும்" சிறு புன் செயலை நாள் தவறாமல் வேளை தவறாமல் செய்யத் தவறுவது இல்லை.

-

"கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே" "கரும்பிருக்க ரும்பு கடித்து எய்த்தவாறே” “விளக்கிருக்க மின்மினித் தீக் காய்ந்தவாறே” என்றெல்லாம் நாவுக்கரசரால் உணர முடிந்தது; அவரைப் போன்ற மெய்யுணர்வாளர்களாலும் உணர முடிந்தது. மற்றையோரெல்லாம் “கனியிருக்கக் காய்" திருடத் தவறுவது இல்லை.