உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அடக்கு! அடங்கு!

தோட்டக்காரன் தன் தோட்டத்தை எப்படிக் காக்கிறான் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்; அல்லது நேரிடையாகக் காணவேண்டும். அவ்வாறு கண்டோமானால் அவன் காவற் சிறப்பு நமக்கு எத்துணை எத்துணையோ அறிவுகளை வழங்கத் தவறாது.

தோட்டக்காவலை ஆராயும் வேளையிலே இரு தோட்டக் காரர்களை எடுத்துக் கொள்ளவேண்டும். ஒருவன் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலத்திற்கு உரிமையானவன், மற்றொருவன் அவனினும், பன்னூறு பங்கில் ஒரு பங்குகூட இல்லாதவன்.

ளது.

அகன்று பரந்த தோட்டக்காரனுக்கும் காவலில் அக்கறையுண்டு. எனினும், சுருங்கிய தோட்டக்காரன் அளவுக்கும் பேரக்கறை இல்லை! ஓரொரு வேளை பெருந்தோட்டக்காரன் காவலில் தவறினால் கூட, அவன் வாழ்வு கெட்டுவிட ஆனால் சுருங்கிய தோட்டக்காரன் காவலில் சிறிது அயர்ச்சி எய்தினால் போதும்; பேரிழப்புக்கு ஆளாவான். வருவாய் அனைத்தும் பாழானாலும் ஆகலாம்! இவ்வாறாயின் இருவேறு தோட்டக்காரர்களும் காவல் போற்றுவர் எனினும், வேற்றுமை உண்டு அல்லவா!

இனிக், காவலை உற்று நோக்குவோம். மூன்று வகையாகக் காவல் புரிகின்றான் தோட்டக்காரன், ஒன்று; வெளியேயிருந்து ஆடு மாடுகள், கழுதை பன்றிகள் போகித் தின்றும் சிதைத்தும் கெடுத்து விடாது காத்தல்; மற்றொன்று; கள்வர் புகுந்து திருடியோ கொள்ளை கொண்டோ செல்லாவாறு காத்தல்; ன்னொன்று, தன்னுள் தானாகக்கிளம்பி, வெதுப்போ நோயோ பற்றிக் கெட்டுவிடாது காத்தல். இம்மூன்று வழிகளாலும் காப்பதே காவல்! எந்த ஒரு காவல் நெறி தவறினாலும் வருவாய் கெட்டு, வாழ்வும்வறண்டு போவது உறுதியே.

க்காவல் முறை நமக்கு என்ன வலியுறுத்துகின்றது? நம்மையும் அக்காவல் முறையைக் கைக்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றது. நாம் எந்தத் தோட்டத்தை இவ்வாறு

காப்பது?