பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? :39 செய்ய முடியவில்லை. பின்னர் அவனைப் பிரித்துவைத்த காலத் திலேயும் தோல்வியடையச் செய்ய முடியவில்லை. மறுபடி தன் தவற்றை நினைந்து வருந்துபவனாகக் கோவலனை உள்ளே வரவழைக்கிறது அந்த விதி குலம்தரு வான்பொருட் குன்றம் தொலைத்த இலம்பாடு நானுத்தரும்” - கண்ணகி மலையத் தனைப் பொருள்கள் செலவழிந்து என்னே என் அறியாமை? என்று வெட்கப்படுகின்ற தன்னிரக்கமான வார்த்தையுடை யவனாக இங்கே வந்தேன்' என்று சொல்லுகிறானே கோவலன், அந்தச்சொல்லிலே புகுந்தது விதி. சிலம்பு உளகொண்ம்'என்று சொல்லிப் பார்க்கிறாளே அந்தப் பெருமாட்டி, அந்தச் சொல்லிலே விதி முந்துகிறது. இலம்பாடு நானுத் தரும்” என்று அவன் சொல்லிய சொல்லிலேயும் சிலம்பு உள கொண்ம்” என்று இவள் சொல்லிய மூன்று சொல்லிலேயும் விதி நின்று கண்ணகியைத் தோல்வி அடையச் செய்கின்றது. ஆகவே, மற்றொன்று சூழினும் தான் முந்துறுகின்ற அந்த விதி முதன் முதலாகக் கண்ணகியிடத்திலேயும், அடுத்தபடியாகக் கோவலனிடத்திலேயும் தன் வெற்றிக் கொடியை உயர்த்தி விடுகிறது. "வளையாத செங்கோல் வளைந்தது. இது என் கொல்?” என்கின்றார்களே மதுரை மாநகர் மக்கள் அதுதான் சிறப்பு. எங்கேயும் தன்னுடைய ஊரவன் ஒருவனை உள்ளுரான் புகழ்வ தென்பது அவ்வளவு சுலபமான காரியமன்று அதை மனத்திலே வாங்கிக் கொண்டே பாடுகின்றார்.இளங்கோவடிகள், ஏனையோர் பாண்டியனுடைய புகழைப்பாடுவதில் பெருமை யொன்றுமில்லை! ஆனால், மதுரை நகரத்திலே வாழும் மக்களே போற்று கின்றார்கள் ஏன்? குறை நிறைவுகள் இரண்டையும் உள்ளூரி லிருந்து நன்றாகக் கண்டுகொண்டிருப்பவர்கள். ஆதலால் அவர்கள் வாயினாலேயே புகழ்கிறார்கள் என்றால் அந்தப் புகழ்ச்சி உண்மையாக இருக்கும் என்பதை அறிவித்தற்காகவே