பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அ.ச. ஞானசம்பந்தன் அடிகள் கூறியதன் கருத்தென்ன என்ற வினா எழலாம். மன்னன் இவ்வாறு கூறி முடித்த இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் அவன் தன் உயிரை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகப் போகின்றது. அவன், தானே தன் உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டிய அவலநிலை உருவாகின்றது என்பதைக் குறிப்பால் உணர்த்தவே வினை விளையப்போகின்ற காலம்” என்ற எதிர்காலப் பெயரெச்சப் பொருளும் கொள்ளும்படிக் கூறினார். முடிவு செய்வதில் சிறு தவறுதான் பாண்டியனு டையதே தவிரக் கோவலன் கொலைக்கு அவன் நேரான காரணமல்லன் என்பதே அடிகளின் தெளிந்த முடிவாகும். ஆனால் மேலோட்டமாகப் பார்க்கின்றவர்கள் கொலைக்கு நேர்க்காரணமாகப் பாண்டியனைப் பழித்துக் கூறுவர். அது அவ்வளவு சரியன்று என்று காட்டவே அடிகள் இத்துனைப் பாடுபடுகின்றார். அரசன் ஆணையிட்டவுடன் பொற்கொல்லன் சேவகர்களை அழைத்துக் கொண்டு கோவலனிடஞ் சென்றான் என்று கூறும் பொழுதேகூட தீவினை முதிர்வலை சென்று பட்டிருந்த கோவலன்' என்று அடிகள் கூறுவதன் நோக்கம் பாண்டியன் மேல் வரும் அடாப்பழியின் அளவைக் குறைக்கவே யாகும். இனி இறுதியாக அடிகள் வினைபற்றிப் பேசுவது கோவலன் வெட்டுண்டு வீழும் பகுதியிலாகும். தண்டனை வழங்கவந்த ஊர்க்காவ்லருள் அறிவுடையவர்களும் இருந்தனர் என்பதை ஆசிரியர் குறிப்பால் உணர்த்துகிறார். கோவலனைக் கண்ட சேவகன் ஒருவன் இலக்கணமுறைமையின் இருந்தோன், ஈங்கு இவன் கொலைப்படுமகன் அலன்”என்று கூறுகிறான். (கொலை 112) இவ்வாறு ஒருவன் கூறியவுடன் பொற்கொல்லன் அஞ்சிவிட்டான். தன்திருட்டு வெளியாகிவிடுமோ என்று அஞ்சிய அவன், கட்டுக் கதைகள் பல பேசிக் காவலர் மனத்தில் குழப்பத்தை உண்டாக்கிவிட்டான். என்றாலுங்கூட வந்த காவலர்