பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 அ.ச. ஞானசம்பந்தன் தாம் பிறந்து வளர்ந்த ஊராகிய காவிரிப் பூம்பட்டினத்து மகளிராலும், மணஞ் செய்துகொண்ட கணவனாலும், கற்றறி வில்லாதவர்களாயினும் வஞ்சகம் இல்லாமல், பொருளைக் கண்டு மனத்துட்பட்டதை அஞ்சாது வெளியிடும் இயல்பு வாய்ந்த வேடுவர்களாலும், முற்றத்துறந்த முனிவராகிய கவுந்தி அடி களாலும் ஒருசேரப் புகழப்பெறும் இயல்புடையார் இத் தேவியார். அவருடைய வாய்மொழியைக்கொண்டே அவருடைய உள்ளப்பாங்கை அறிய வேண்டுமானால், அதற்கும் சில வாய்ப்புகள் இருக்கின்றன. முற்பகுதி முழுவதிலும், கணவனை பன்றி வேறொரு தெய்வத்தைக் கனவிலும் கருதாதவராய் வாழ்ந்தார் என்று அறிகிறோம். மன்மதன் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டுமென்று கூறிய தோழியை நோக்கி, 'பீடு அன்று” என்று கூறுவதால் இதனை அறிகின்றோம். கணவன் தான் செய்த குற்றங்களையெல்லாம் வரிசைப் படுத்தி எண்ணி, இறுதியில் தான் அனைவருக்கும் இடுக் கண் செய்ததை உணர்ந்து வருந்துகிறான். மதுரையில் தான் கணவனும் மனைவியும் இரண்டாம் முறையாகத் தனித்துப் பேசும் வாய்ப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் கோவலன் அவளுடைய மென்மையைப் பாராட்டிவிட்டுத் தன் தவறு களையும் வரிசைப்படுத்திப் பார்த்து இறுதியில் தான் அழைத்தவுடன் மறுப்பு ஒன்றும் கூறாமல் கண்ணகி மதுரைக்குப் புறப்பட்ட அருமையை நினைந்து எழுக என எழுந்தாய், என் செய்தனை?" (1670) என்று பேசுகிறான்.