பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 97 கோவலன் மனம் மாசு நீங்கி ஒளிவிடும் இந் நிலையில் கண்ணகியின் மனம் ஒரளவு அகங்காரத்தில் அமிழத் தொடங்குகிறது. என் செய்தனை? என்ற வினாவிற்கு அப்பெருமாட்டி தந்த விடையை, “அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஒம்பலும் துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலு மிழந்த வென்னை’ (16 : 71) என்ற அடிகளால் அறிகின்றோம். இவ்விரண்டு பகுதிகளிலிருந்தும், இதனையடுத்துக் கோவலனை நோக்கி, மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின், ஏற்று எழுந்தனன்யான்”என்று கூறுகிற பகுதியிலிருந்தும் முன்பு சொல்லப் பெற்ற மாயை, கன்மம் என்ற இரு குற்றங்களையும் ஒருவாறு போக்கி வாழ்பவராகவே காட்சியளிக்கின்றார். ஆண்டான், அடிமைத்திறத்தில், தலைவனாகிய கோவலனிடத்து முற்றும் தன்னைச் சரணாகதியில் அமிழ்த்துவிட்ட இப்பெருமாட்டி, இவ்விரு குற்றங்களிலும் அகப்படக் காரணம் இல்லை என்றாலும் விடை சிறப்புடைய தாயினும் விடை கூறியவர் மனநிலையைக் காட்டாமற் போகவில்லை. இதுவரை அவள் அடக்கி வைத்திருந்த சினம் மெல்லத் தலை தூக்குகிறது. உள்ளடங்கிய சினமாகவின் சுடு சொற்களால் வெளிப்படாமல் மனத்திலுள்ள கசப்பை மட்டும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துவிடக் காண்கிறோம். உயிர்க் காதலன் பிரிவால் அவள் கவலையுறவில்லை; ஆனால், கடமைகளை நிறைவேற்ற முடியாமைக்காக வருந்தியதுபோல அவ்விடை அறிவிக்கிறது. அகங்காரம் மெல்லத் தலை தூக்கித் தன் இருப்பை அறிவிக் கிறது. இதனையடுத்துக் கோவலன் வெட்டுண்ட பின்னர்ப் பாண்டியன் அவைக்களத்தை நோக்கிச் செல்லும்பொழுது, ?