பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.. -س سح---------مم-سسه - بسسعباسیس... م . ~ Sviz<_- _N த லேவாழை இலேப்பரப்பில் சிரிக்கும் பொங்கல் தண்மதியே! உதிர்க்கின்ருய் முகத்தில், பண்பில். தலேமகளே! பவளநிறப் பானே வைத்து தளிர்க்கரத்தால் மஞ்சளிஞ்சி கரும்பு கட்டி, கலேயழகு மிளிர்ந்திடவே அடுப்பி லிட்டு கணித்தமிழில் பண்ணிசைத்தோம் தாளத் தோடு! தலைப்பொங்கல் நீபொங்க இன்பம் பொங்கி தனிப்பொங்கல் பொங்கிட்டோம் கடந்த ஆண்டில்! நீர்பொங்கி நிலம்பொங்கி வயல்க ளெல்லாம் நீள் கதிர்கள் தானியங்கள் பொங்கும் போதில் கார்பொங்கி வளிபொங்கி இயற்கைச் சீறறம் களக்காடாய் நாடெல்லாம் பொங்கி, உயரும் ஊர்பொங்கி உயிர்பொங்கி மக்கள் கெட்டு உலேபொங்க இடமுமின்றி மனமும் பொங்கி சீர் பொங்கும் செயல்களிலே தடையும் பொங்கிச் சினம்பொங்கச் செய்ததந்தோ! இயற்கைப் பொங்கல்! வெண் பொங்கல் உன்நெஞ்சின் தூய்மை காட்டும், விரிமலரே! செந்தேனே! அன்பின் ஊற்றே! கண்பொங்கிப் பார்வையற்ருேர் ஒளியைப் பெற்றேர் காட்சிதனே' மாட்சிதனேக் கானு கின்ருேம். மண்சொந்தம் நிலப்பட்டா ஏழைக் கின்பம் மருவுகின்ற நேரத்தில் ஏதோ சில்லோர் கண்குருடாய் அரசியலில் ப்ொங்கி யுண்டு களிப்படையும் சூழ்ச்சிதனேப் பொங்க விட்டார்! நினைத்தாலே பொங்குதடி, நீசத் தன்மை நிலத்திருக்க விடுவோமா? வீறு கொண்டு வினைமுடிப்போம், பண்பாட்டைத் தமிழர்நாட்டு விவேகத்தைக் காத்திடுவோம். வெற்றி கொள்ள முனைந்திடுவோம் வஞ்சகரின் செயல்கள் வீழ்த்த! முன்னேற்றம் தடைபடவோ படைகள் கொண்டோம்? பண்ேவெல்லம் ஒளடதமே! உணர்வு பெற்றுப் பால் பொங்க உளம்பொங்கி உயர்வோம் கண்ணே!. - வேதா மினுளின் 96.