பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்களிலே ஒருவருக்கு நம் மகளேத்திருமணம் செய்து வைக்க வேண்டும். தெய்வத்தின் அரு ளால் பிறந்த நம் மகளைத் தெய்வ பக்தர் ஒருவருக்குக் கொடுக்கவே நான் விரும்புகிறேன். என்ருன் ー。『ó*6T. 'தங்கள் விருப்பமே என் விருப்பம்” என்ருள் அரசரை என்றுமே எதிர்த்துப் பேசியறி யாத அரசி. நாளேயே நான் ஏற்பாடு செய்கிறேன்" என்ருன் அரசன். அதற்குப் பிறகு அவர்கள் பேச்சை நிறுத்தி விட்டு உறங்கி விட்டார்கள். வெளியில் ஒளிந்திருந்த திருடன் அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். 'நான் இங்கு வந்த நேரம் நல்ல நேரந்தான். இளவரசியை மணம் புரியும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக் கிறது. நான் இப்போது திருட வேண்டியதில்லை. நாளை ஆற்றங் கரைக்குப் போய் சாமியார் களோடு சாமியாராய் உட்கார்ந்து விட வேண்டியதுதான். வாய்ப்பு இருந்தால் இளவரசியின்கணவன் ஆகிவிடுவேன். அதனுல் அரச ருக்கு வாரிசும் ஆகிவிடுவேன்’ என்று எண்ணிக்கொண்டே திருடன் அங்கிருந்து கிளம்பின்ை. -- எப்படித் தந்திரமாய் அரண் மனேயின் உள்ளே நுழைந்தானே அப்படியே வெளியேறிவிட்டான். மறுநாள் அவ்வூர் ஆற்றங்கரை யில் சாமியார் வேடத்துடன்போய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டான். அரண்மனை அதிகாரிகள் வந் தார்கள். ஆற்றங்கரையில், மரங் களின் அடியில் ஆங்காங்கே உட்கார்ந்து இறைவனே நோக்கித் தொழுதுகொண்டிருந்த சாமியார் களைக் கண்ட சர்கள். ஒவ்வொரு வரிடமாகச் சென்ருர் கள். 'ஐயா தாங்கள் எங்கள் அரசன் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று கேட்டார்கள். குடும்ப வாழ்க்கையே வேண்டாம் என்று வந்திருந்த அந்த உண்மையான சாமியார்கள் இளவரசியைத் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்கள். அதிகாரிகள் <今阿5F ருடைய விருப்பத்தை எவ்வளவோ எடுத்துக் கூறியும் அந்தச் சாமி யார்கள் ஒப்புக்கொள் ளவில்லை. சாமியார் வேடத் தில் இருந்த திருட னிடம் வந்தார்கள். மற்ற சாமியார்கள் மறுத்து விட்டதைக் கவனித்த திருடன், தான் உடனே ஒப்புக் கொண்டால் ஐயம் தோன்றக் கூடும் என்று எண்ணி முத லில் மறுத்துவிட்டான். 82