இளந்துறவி 119 தெரியாவிட்டாலும் என்னுடைய உபதேசத்தைக் கேட்க வருகிறவர்களுக்கு வித்யாசம் நன்கு தெரி கிறது. ராம : அவர்களுக்கு உன்னைப்பற்றியோ, உன்னுடைய பழைய வாழ்க்கையோ தெரியாதே. சுப்பிர : தெரியாவிட்டால் பரவாயில்லை-உனக்கு என் புது வாழ்வு தெரியாது. ராம (காது கொடுத்துக் கேட்டு) . உன் பாட்டை யாரோ பாடுவது போல இருக்கிறதே : சுப்பிர : உஸ்...பேசாதே சொஞ்சம் நில்லு. (உற்றுக் கேட்கிருன்..! ராம : உன்னுடைய பாட்டுத்தான்-லக்ஷ்மியா பாடுவது? சுப்பிர உஸ்.சும்மா இரு... (பாட்டுக் கேட்கிறது. பாடுபவள் கமலா.1 கமலா (பாட்டு) : பல்லவி வழிகாட்டுவாய்-அருட்பெருஞ்சோதி (வழி) அனுபல்லவி வழி அறியாமலே மயங்கினேன் அரசே வாழ்க்கைச் சுழலில் பட்டு வருந்தினேன் ஐயா (வழி) சரணம் ஒளிமயமானதோர் அருள் நிலை நீயன்ருே ஓங்கிருள் சூழநான் உழன்றிடல் நன்ருே வளர்பெருங் கருணையே மாண்புயர் வள்ளலே மனத்துயர் மாற்றிட வந்திடும் செல்வமே (வழி)
பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/121
Appearance