பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்துறவி 125 இந்தப் பட்சணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போ. நான் சொன்னதை ஞாபகத்தில் வைத்துக்கொள். லகல்,மி : மறக்கவே மாட்டேன், சுவாமி. இன்றைக்குத் தெரியாமல் தப்பிப் போய்விட்டது. (தட்டை எடுத்துக்கொண்டு புறப்படுகிருள் 1 காட்சி ஆறு [சத்திரத்தின் முன் வாசல். சுப்பிரமணியம் தாழ் வாரத்தில் நின்றுகொண்டிருக்க ராமநாதன் எதிரே வருகிருன், காலை நேரம்.) சுப்பிர வா, ராமநாதா. உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், ஏன் இவ்வளவு நேரம்? ராம : கோயம்புத்துரிலேயே காப்பி சாப்பிட்டுவிட்டு வந்தேன். அதனல் நேரமாகிவிட்டது. சுப்பிர : ஏன் பேரூர்க் காப்பி பிடிக்கவில்லையா ? ராம : காப்பி மட்டுமல்ல. காலையிலே அந்த ஆற்றில் போன தடவை குளித்ததே போதும். சுப்பிர : அடடே அதுவா விஷயம் ? உனக்குப் புண்ய தீர்த்தம் கொடுத்து வைக்கவில்லை. ராம : சுப்பிரமணியம், அந்தப் பெண் யாரென்று விசாரித்தாயா ? இ த ற் கு ஸ் ேள தெரியாமலா இருக்கும்?