பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றவாளி 17 முடிவு சொன்னல் போதும். ஆத்திரப்பட்டு உங்கள் வாழ்க்கையையே கெடுத்துக்கொள்ள வேண்டாம். நான் போய் வருகிறேன். tராகவன் வெளியே போகிருன். வாசுதேவனும் மாலதியும் சற்று நேரம் மெளனமாக நிற்கிரு.ர்கள்.) வாசு ; அவன் போகட்டும். வெளிக்கதவைத் தாளிடு மாலதி. மாலதி (தாமதித்து, விசனமாக) : இப்பொழுது என்ன செய்வது? அவன் சொல்லுகிறபடி பணத்தைக் கொடுத்துவிடுங்கள். அதுதான் நல்லது. வாசு : என்ன, நீயும் என்மீது சந்தேகப்படுகிருயா ? மாலதி (விசனத்தோடு): எனக்கென்ன சந்தேகம்? இப்படி சவகாசம் வைத்துக்கொண்டால் வராத தீமையெல்லாம் வந்துதான் சேரும். வாசு : மாலதி, நான் சரோஜினியோடு எந்தவிதமான சவகாசமும் கொண்டிருக்கவில்லை. மாலதி பின்னே எதற்கு அவள் வீட்டிற்குப் போனிர்கள்? வாசு , அவள் என்னவோ உதவி வேண்டுமென்று பல தடவை ஆபீசுக்கு வந்தாள். ஆபீசிலே இந்த விஷயமெல்லாம் பேச முடியாதென்று சொன்னேன். பிறகு அவள் மிகவும் மன்ருடிக் கேட்டதால் வீட்டுக்கு வர ஒப்புக் கொண்டேள்; அவ்வளவுதான். மாலதி, அவள் உங்களிடத்திலே உதவிக்கு வருவானேன்? வாசு : காலேஜில் நாங்கள் ஒன்ருகப் படித்தோம். அதை வைத்துக்கொண்டு என்னிடம் வந்திருக் கிருள்.