பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 குற்றவாளி மாலதி : அப்படி முன்னமேயே பழக்கமா? பிறகு அவளேயே நீங்கள் கல்யாணம் செய்துகொண் டிருக்கலாமே? வாசு (கோபமாக) : மாலதி, உனக்கு என்மேலே நம்பிக்கையில்லையா? இதென்ன பேச்சு? மாலதி (தேம்பிக்கொண்டே) : என்னுடைய நம்பிக்கை யைப்பற்றி இப்பொழுதென்ன? நீங்கள் தப்பித்து கொள்ள வழி தேடுங்கள். வாசு : நீ சந்தேகப்பட்டால் எனக்குத் தப்பிக்க வேண்டு மென்ற ஆசையே கிடையாது. நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. இருந்தாலும் நீ இப்படி நினைத்தால் நான் எந்தக் குற்றத்தையும் . ஏற்றுக்கொள்ளத் தயார். மாலதி : இப்படி நீங்கள் பேசக்கூடாது - குற்றம் செய்யாவிட்டாலும் நீங்கள் சுட்டுக் கொன்றதாக நிரூபிக்க வேண்டிய சாட்சியங்கள் இருக்கின்றன. அதனுல் அவன் கேட்கிறதுபோலப் பணம் கொடுத்து விடுங்கள். வாசு : என்னிடம் இப்பொழுது கையிலே இருபதி ளுயிரம் இல்லை. இருந்தாலும் கொடுக்கமாட்டேன். மாலதி (கவலையோடு): ஐயோ, உங்கள்மேல் பெரிய பழி வந்து சேரும். கையிலே இருக்கிற பத்தாயிரத்தைக் கொடுத்தால் அவன் திருப்தியடைந்துவிடுவான். வாசு : பழி வந்தால் வரட்டும். இனிமேல் இந்த வாழ்க்கையைப்பற்றி எனக்குக் கவலையில்லை. மாலதி : நீங்கள் இப்படிப் பேசலாமா? உங்களுடைய ஆசையெல்லாம் ஒரு rணத்திலே இப்படி மறைந்து போகுமா?