பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குற்றவாளி 19 வாசு : நீ என்னைப்பற்றிச் சந்தேகமாக நினைக்கிறபோது இந்த வாழ்க்கையே எனக்கு வேண்டாம். மாலதி : என்னுடைய சந்தேகம் ஒரு பொருட்டல்ல. நீங்கள் இந்த ஆபத்திலிருந்து தப்பவேண்டும். வாசு : தப்பி என்ன பிரயோசனம்? உன்னுடைய சந்தேகத்தால் நமது வாழ்க்கை இனிமேல் இன்ப மாக இராது. மாலதி (தேம்பிக்கொண்டு): நீங்களே எனக்குத் தெய்வம். நீங்கள் என்ன தப்புச் செய்தாலும் நான் அதைப். பற்றி நினைக்க மாட்டேன். என்னுடைய மனதை யறியாமல் எதற்கு இப்படிப் பேசுகிறீர்கள்? வாசு : உன்னைத் தவிர வேறு பெண்ணே நான் கனவில் கூட நினைத்ததில்லை. ஆயிரம் வகைகளிலே எனது அன்பை உனக்குக் காட்டியிருக்கிறேன். மாலதி : நான் இவற்றையெல்லாம் மறுக்கிறேன என்ன? இப்பொழுது நீங்கள் இந்தத் தொல்லேயிலிருந்து விடுபடவேண்டும். அதுதான் எனக்குக் கவலை. (வெளிக்கதவிலிருந்து மணியடிக்கும் ஒசை கேட் கிறது.1 வாசு : யாரோ வெளியிலிருந்து கூப்பிடுகிருர்கள். முனியன் எங்கே போனன்? மாலதி : நாம் சினிமாவுக்குப் போவதாக இருந்ததால் அவனைப் போகச் சொல்லிவிட்டேன். நாளைக் காலையில்தான் வருவான். வாசு : ஒருவேளை சோமுவாக இருக்கும்-கதவைத் திறந்து பார்.