பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 காதல் லங்கே ! பானுமதி : அண்ணு, வந்துவிட்டீர்களா ? பாங்கு முடிய இவ்வளவு நேரமா ? சதாசிவம் : இன்றைக்கு எதிர்பாராத விதமாக வேலை இருந்தது. தினமும் இவ்வளவு நேரமாகாது ..... லலிதா, கொஞ்சம் சூடாகக் காப்பி கொண்டுவாஏனே தலே வலிக்கிறது. லலிதா : சாயங்காலம் காப்பி சாப்பிடாமல்கூட வேலை செய்திருப்பீர்கள். அதுதான் தலை வலிக்கிறது. இதோ ஒரு நிமிஷத்தில் காப்பி போட்டு வருகிறேன். (வேகமாக உள்ளே போகிருள் 1 பானுமதி : அண்ணு, இன்றைக்கு லலிதா ரொம்ப அழகாகப் பாடினுள். சதாசிவம் : அப்படியா ? அவள் பாட்டென்ருல் எனக்கு உயிர். வேலைக்குக்கூடப் போகாமல் அதையே கேட்டுக்கொண்டிருந்து விடலாம் என்றுகூடச் சில சமயங்களிலே தோன்றும். பானுமதி : அதை அவளிடத்திலே சொல்லுங்களேன் அண்ன ? சதாசிவம் : என்ன நீயுமா இப்படிப் பேசுகிருய் ? பானுமதி : வானளாவப் புகழ்ந்து யாராவது பேசவேணு மென்றுதான் அவளுக்கு ஒரே ஆசை. அது ஒன்றிருந் தால் அவளுக்கு எல்லாம் திருப்தியாக இருக்கும். சதாசிவம் : பானு, இந்த வெளிப்பகட்டைக் கண்டு நமது உணர்ச்சியே மழுங்கிப் போய்விட்டது. உண்மை யான உள்ளன்பைத் தெரிந்துகொள்ளக்கூட முடிகிற தில்லை. நாடகத்திலே பேசுபவரைப்போல உதட்டிலே தேன் சொரிந்தால் அது போதும்.