பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காதல் எங்கே ? 89 பானுமதி : உன்னுடைய வீடு அவருக்கு நல்ல உக்கிராண அறையாக ஆகிவிட்டது. அப்படித்தானே ? லலிதா பானு, ஒரு கலைஞருக்கு உதவி செய்வதை நான் ஒரு பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். பானுமதி : அண்ணுவுக்கு இதெல்லாம் தெரியுமா ? லலிதா : தெரியாமல் இதிலே ரகசியம் என்ன இருக்கிறது? பானுமதி : அவருக்குச் சம்மதமென்ருல் எனக்கொன்றும் ஆட்சேபமில்லை. லலிதா : பானு, அவர் எனது விருப்பத்துக்கு மாருக ஒன்றுமே சொல்லமாட்டார். பானுமதி : சரி, டீ பார்ட்டி எங்கே ? அதை விட்டு விட்டாயே ? லலிதா : நம்மகடிடக் கல்லூரியிலே படித்தாளே சரோஜா, அவள் வீட்டில்தான். நீ இங்கு வந்திருக்கிற விஷயத்தை இன்றைக்கு நான் சொன்ன பிறகுதான் அவளுக்குத் தெரியும். உன்னைக் கண்டிப்பாக கூட்டிக்கொண்டு வரும்படி சொன்னுள். பானுமதி : யார், அந்த ஊர் வம்பெல்லாம் பேசுவாளே அந்த சரோஜாவா ? லலிதா : ஆமாம், அவளேதான். செய்தி விளம்பர இலாக்காவுன்னு கேலி செய்வோமே அவளேதான். இன்றைக்கும் அதே மாதிரிதான் இருக்கிருள். பானுமதி அவள் சென்னையிலேதான் இருக்கிருளா ? எனக்கு இத்தனை நாளாக நீ சொல்லவே இல்லையே? லலிதா அவளோடு நான் அதிகமாக வைத்துக் கொள்வ தில்லை. எப்பவாவது இப்படித் தவிர்க்க முடியாமல் அகப்பட்டுக்கொண்டால்தான் போவேன்.