பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடிந்த கோயில் 113. ஊ ராம். இந்த ஊரைச் சார் ந் த கோயிலே அது என்பார்கள். எது எப்படியாயினும் எனது இளமையின் உள்ளத்தைப்பற்றி ஈர்த்த ஒரு சில இடங்களில் அக் கோயில் உள்ள இடமும் ஒன்ருகும். அக் கோயிலிலிருந்து பார்த்தால் வடக்கே பரந்த பாலாற்று மணல் தோற்ற மளிக்கும். கிழக்கே சற்றுத் துரத்தே ஒரு கல் எல்லைக்குள் முக்கூடல் என்ற ஊர். பாலாறும், சேயாறும் கூடும் இடமாகும். அதை அடுத்து இருபுறம் சிறு மலைகள்; அவற்றிடையில் நுழைந்து செல்லும் பாலாற்றின் தோற்றம். தெற்கே பரந்த வயல் வெளிகள். மேற்கே நல்ல சோலையும் ஊரும். மாலை வேளைகளில் அச் சோலையில் ஆயர் மாடுகளைக் கொண்டு வந்து மடக்கி வைத்திருந்து, பொழுது சாயச் சாய மெள்ள மெள்ள அவைகளை வீட்டிற்கு ஒட்டிக்கொண்டு போவார்கள். இப்படிப்பட்ட இயற்கைச் சூழ் நிலையில் அமைந்த அக்கோயில் என் உள்ளத்தில் இடம் பெற்றதில் வியப்பில்லை அல்லவா! - கோயிலில் இலிங்கம் மட்டும்தான் இருந்தது என்றேன். அவ்விலிங்கத்துக்கு வானிஸ்வரர் என்று பெயர். அக்கோயி லுக்கும் வானிஸ்வரர் கோயில் என்றே பெயர். நானும் என் நண்பரும் மாலையில் அங்கே சென்று ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கல் மீது உட்காருவோம். ஒரு நாள் ஒரு பழம் கற்சிலையின் மீதே உட்கார்ந்து விட்டோம். எப்படியோ அவ்விக்கிரகத்தைப் புரட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று, சிறுவர்களால் என்ன செய்ய முடி யும்? தூரத்தே மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிலரைக் கூவி அழைத்தோம். அவர்கள் வந்தார்கள். அனை வருமாகச் சேர்த்துப் புரட்டினுேம்; நன்ருகப் புரட்டிப் பார்த்தோம். முகமும் பிற பகுதிகளும் மண்ணுல் மூடப்பட் டிருந்தன. அன்று அதற்குள் இருட்டிவிடவே ஒன்றும் செய்யாது வீடு திரும்பிவிட்டோம்.