பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. பயங்கர இரவு வாலாஜாபாத்தில் எட்டாம் வகுப்புப் படித்து முடித்த வுடன் எனது தாயார் என்னை மேல் வகுப்புக்குச் செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தினர்கள். எனது குடிக்கு நான் ஒரே மகன் ஆனதாலும், வீட்டில் வேலைகளைக் கவனிப்பதற்கு வேறு யாரும் இல்லை ஆதலாலும், எனது தந்தையார் இறந்த பிறகும் கூட எனது பெரியம்மா தனி யாகவே இருந்தமையாலும், ஊரில் பல்வேறு குழப்பங்கள் இருந்தமையாலும் என்னை அ ன் னையார் வெளியூருக்கு அனுப்ப விரும்பவில்லை, வெளியூர் செல்வார்களானல் இளம் பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு. அதுவும் காஞ்சிபுரத்துக்கு எங்கள் ஊரிலிருந்து சென்ற இரண்டொரு பிள்ளைகள், படிக்காது வேறு வகையாகக் கெட்டுத் திரும்பினர்கள் என்பதை என் அன்னையார் கண் டார்கள். ஆதலால் வெளியூர்களுக்கு அனுப்ப அவர்கள் இசையவில்லை. என்ருலும் நான் எப்படியாவது ஒரு பத் தாவது வரையாவது படித்து விடுகிறேன் என்று மன்ருடி னேன். எனது பாட்டியாரும் எனக்குத் துணையாகப் பேசி ஞர்கள். தான் உடன் வந்து சமைத்துச் சோறிட்டுப் பாது காத்துக் கொள்வதாகவும், காஞ்சிபுரத்துக் கன்றிச் செங்கற் பட்டுக்கு அனுப்பினுல் நல்லது என்றும் சொன்னர்கள். அப்போதும் எனது அன்னையார் இசையவில்லை. அவர் களுடைய எண்ணமெல்லாம் ஒன்றேதான். எப்போதும் என்னைத் தன் மேல் பார்வையில் வைத்துக்கொண்டு, நல்ல வகை ஆக்கி வளர்க்கவேண்டும் என்று முடிவு செய்தார்கள். நான் செய்வதறியாது திகைத்தேன். பிறகு வாலாஜாபாத்தில் அப்பா' வா. தி. மாசிலாமணி முதலியார் அவர்களிடம்