பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 இளமையின் நினைவுகள். இருந்தேன்; நேரம் போவதே தெரியவில்லை. இரவு பத்து மணிக்கு மேலாகியிருக்கும். பாட்டி படுத்து ஒரு தூக்கம் தூங்கி எழுந்திருந்திருப்பார்கள். அவர்கள் வந்து என்னையும் மற்றவரையும் படுக்கச்சொன்னர்கள். நான் உள்தாழ்வாரத் தில் வந்து படுத்துக் கொண்டேன். ஏனே தூக்கம் வர வில்லை. நெடுநேரம் விழித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் எதை எதையோ எண்ணிக் கொண்டேயிருந்து அப்படியே உறங்கிவிட்டேன் என நினைக்கிறேன். நான் அலறிக் கண் விழித்தேன். பக்கத்தில் பாட்டி உட்கார்ந்து கொண்டு எ ன் னை த் தட்டிக்கொண்டிருந் தார்கள். நான் எழுந்து உட்கார்ந்து கொண்டேன். நான் ஏதேதோ சொல்லிக் கூச்சலிட்டதாகவும், என்னை எழுப்பவே பாட்டி அருகில் வந்து உட்கார்ந்து தட்டியதாகவும் கூறி ர்ைகள். என்னை என்ன? என்று கேட்டார்கள். அப்போது விடியும் நேரம் ஆகிவிட்டது என்று அறிந்தேன். வீட்டுக்கார அம்மாவும் அவர்கள் பிழைப்பாகிய இட்டிலி சுட்டு விற்கும் வேலைக்காக எழுந்துவிட்டார்கள். பாட்டியார் நான் ஏன் அலறினேன் என்று கேட்டார்கள். ஏதோ பயங்கரக் கனவுகள் கண்டேன் என்றும், அந்தப் பயத்தில் கூச்சலிட்டேன்என்றும் உண்மையைக் கூறினேன். என்னை எழுந்து கைகால் கழுவிக் கொள்ளச் செய்து, திருநீறு இட்டு மறுபடியும் படுத்துக் கொள்ளச் சொன்னர்கள். நான் முன்னுள் இரவு நெடுநேரம் தெருவில் பேசிக்கொண்டு இருந்தமையால் .ெ த ரு வி ல் எதையோ கண்டு பயந்திருப்பேன் என அவர்கள் நினைத்து விட்டார்கள். நான் மறுபடியும் படுத்துக் கண்ணை மூடினேன். உறக்கம் வருவதாக இல்லை. ஏதேதோ நினைவுகள் ஒன்றன்