பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 இளமையின் நினைவுகள் கொடியவர் என்று பெயரெடுத்தாலும்கூட, அவர் பள்ளிக் கூடச் செயல்முறை வழியில் ஒழுங்காகவே இருந்தார். மாண வர் விருப்பத்தின் வழி ஒழுகி, அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்யவும் அவர் என்று ம் பின்வாங்கியதில்லை. அவர்கள் ந ல னி ல் அக்கரை கொண்டே அரும்பாடுபட்டார். எனவே மாணவர்களுக்கு அவர்பால் ஒருபக்கம் அச்சமும், மற்ருெருபால் மதிப்பும் வளர்ந்துவர வாய்ப்பு இருந்தது. அன்று என்னுடைய வீட்டுப்பக்கத்தில் இருந்து வரும் நண்பர்களெல்லாம் பகல் உணவுக்காக வீடு சென்று விட்டார்கள். நான் மட்டும் ஏனே பள்ளியிலேயே தங்கி விட்டேன். காரணம் நன்கு புலப்படவில்லை; மறந்தேன். ஒருவேளை எனது பாட்டியார் அன்று ஊருக்குச் சென்றிருந் தார்களோ என நினைக்கிறேன். ஊருக்குச் செல்லவேண்டி இருந்தால் பாட்டியார் சாதம் பிசைந்து வைத்துவிட்டு முன் ள்ை மாலை சென்று மறு நாள் மாலை வந்து வழக்கம்போல் சமையல் செய்வார்கள்; அன்றும் அப்படித்தான் என நினைக்கிறேன். எனக்குச் சரியாக நினைவு இல்லை. காலையில் தயிர்ச் சோறு உண்டு பள்ளிக்கு வந்துவிட்டேன். பகல் வேளையில் பக்கத்தில் உள்ள கடையில் ஏதேனும் பழம் வாங்கிச் சாப்பிட இருந்தேன். எனவே என் நண்பர்க ளோடு பகல் உணவுக்கு நான் வீட்டுக்குச் செல்லவில்லை. பள்ளியில் நான் அறியாமலேயே வேறு சிலருடன் சிநேகம் செய்துகொண்டேன். அவர்கள் வேறு பகுதிகளி லிருந்து வந்தவர்கள். என்னுடன் ஒருசேர வரும் மாண வர்கள் அனைவருமே நல்லவர்கள். அவருள் ஒருவர் மட்டும் அந்த வயதிலேயே பொடி போடக் கற்றுக் கொண்டார். என்ருலும் அவர் மற்றவரை அந்தத் துறைக்கு அழைத்தது