பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 இளமையின் நினவுகள் திருந்தான். இரண்டையும் சேர்த்து அந்தச் சாமியாரிடம் கொடுத்து பாவம், வெகு தொலைவில் இருந்து வந்திருக் கிறீர்கள். இதைக்கொண்டு ஏதாவது உண்டு செல்லுங்கள் என்று சொன்னேன். அவர் சிரித்தார். ஒருவேளை அதைக் குறைவாகக் கருதினரோ அன்றி ஒன்றும் வேண்டாம் என்று நினைத்தாரோ என நாங்கள் கருதிக்கொண்டிருக்கும் அதே வேளையில் தம்பிகளே! யானைப் பசிக்கு இது எம்மாத்திரம்: என்ருர். அப்போதுதான் அவர் அதிகப் பணம் வேண்டு கிருர் என்பது புலப்பட்டது. நாங்கள் என்ன செய்யமுடியும்? படிக்கும் எங்களிடம் பணம் ஏது? உள்ளதை நாங்கள் சொல்லிவிட்டோம். அவர் விடுவதாக இல்லை. நீங்கள் வீட்டில் போய்த் தேடிப் பாருங்கள். ஏதாவது கிடைக்கும்’ என்று சோசியம் சொல்லுவதுபோல் சொன்னர். எனக்குத் தெரியும் வீட்டில் ஒன்றும் இல்லை என்பது. என்ருலும் என் நண்பன் வீட்டில் ஒரு ரூபாய் வைத்திருந்தானும். அதைத் தான் சாமியார் கண்டு சொன்னர் என்று அவன் கருதின்ை. ஆம் வீட்டில் ஒரு ரூபாய் வைத்திருக்கிறேன். அதைக் கொண்டுவருகிறேன்' என்ருன் அவன். நாங்கள் இருவரும் உடனே விரைந்து வீட்டுக்குத் திரும்பினுேம். சிறிது நேரம் கழித்து அந்த நண்பனுடைய ஒரு ரூபா யுடன் நாங்கள் அந்தச் சாமியார் இருந்த இடத்திற்குச் சென்ருேம். அரைமணி நேரத்துக்கு மேலாகி இருக்கும். அங்கு நான்கைந்து பேர் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு வர் எங்களுக்குத் தெரிந்தவர்தான். நாங்கள் அங்கு சென்று நின்று சுற்றிப் பார்த்தோம். அவர் ' என்ன தம்பி பார்க்கி lர்கள்?’ என்று கேட்டார். இங்கு ஒரு சாமியார் இருந் தார், அவரைப் பார்க்கிருேம்’ என்றேன். உடனே அவர் சரிதான் நீங்கள் ஏமாந்துவிட்டீர்களா? எவ்வளவு கொடுத் தீர்கள் ' என்ருர். அவர் அந்தச் சாமியாரைப் பற்றிப் பல வகையில் பழித்துரைத்தார். நாங்கள் நடந்த கதை