பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. மூக்குத்தி - ஒரு நாள் நானும் என் அன்னையும் வீட்டில் உட்கார்ந் திருந்தோம். அந்த வேளையில் எங்கள் தெருவில் குடியி ருக்கும் ஒருவர் வீட்டில் நுழைந்தார். ஒவ்வொரு ஊரிலும் ஒரு வேலையும் செய்யாது அப்படியே சுற்றிச் சுற்றித் திண்ணையிலும் பலகையிலும் படுத்து உறங்கிக் காலம் கழிக் கும் நல்லவர் ஒரு சிலராவது இருப்பார்கள் என்பது இப்போது எனக்கு நன்ருகத் தெரிகிறது. ஆலுைம் அன்று நான் படித்துக்கொண்டிருந்த அந்த நாளில் எங்கள் தெருவில் இப்படி ஒருவர் இருந்ததைக் காண நான் ஆச்சரி பப்பட்டேன். ஊரில் உள்ளவர்களெல்லாம் காலையில் எழுந்து வயல் வேலைகளுக்குச் சென்று வேலை செய்து கொண்டிருக்க, இப்படி ஒருவர் உட்கார்ந்து கொண்டு, வழியில் போவோர் வருவோரை எல்லாம் வலிய அழைத்து அவர்கள் வேலையையும் கெடுத்துக் கொண்டு, வீண் பேச்சுப் பேசும் நல்லவர்களாக இருப்பதை நான் விடுமுறை யில் ஊருக்குப் போகையில் அறிந்துகொண்டேன். நான் எங்காவது வெளியில் செல்ல நேர்ந்தாலும் அந்தப் பக்கம் செல்வதில்லை. சென்ருல் எப்படியும் அழைத்து உட்கார வைத்து ஊர்க் கதைகளையெல்லாம் சொல்லி ஒரு நாளைப் போக்கிவிடுவார். அப்படிப்பட்டவர் திடீரென்று வீட்டில் நுழையவே நான் அன்றைக்கு யாரும் பேச்சுக்குக் கிடைக்க வில்லை போலும், வீட்டில் வந்து வீண் வீம்பு அளக்கப் போகிருர் என நினைத்துக் கொண்டேன். நான் நினைத்தது வீண் போகவில்லை. ஏதேதோ அளந்தார். கடைசியாக ஒரு சிறு மூக்குத்தியைக் காட்டி 'இது உன்னுடையது தானு: பார்’ என்று அம்மாவிடம் நீட்டினர். அம்மாவும் ஆம் என்ருர்கள்.