பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மத்தளத்தட்டு, நான் ஊர்ப் பள்ளியிலே நான்காவது ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த காலம். பள்ளிக்கூட நேரம்போக மாலை வேளையில் நண்பர்களுடன் சிலு:நாட்களில் விளையாடு வதுண்டு. ஒரு நண்பர் வேடிக்தை fகப் பொழுது போக் கும் விருப்புடையவர். அவருக்கு நீரிடகம் நடித்தல் முதலிய வற்றில் ஆர்வம் உண்டு. அப்படியே புல்லாங்குழல், மிரு தங்கம் அல்லது மத்தளம் முதலியன வாசிப்பதில் ஆசை கொண்டவர். அதற்காகச் சிலர் அவருக்கு நண்பரானர்கள். இரண்டொரு மத்தளங்களை வாங்கி வைத்துக்கொண்டு அவர்கள் வீட்டில் வாசிக்கக் கற்றுக் .ெ கா ள் ள ஆரம்பித்தார். நானும் அவர்களோடு உட்கார்ந்து கொண்டு வேடிக்கையாக அந்த மத்தளம் தட்டுவதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். நண்பர் சிலர் தேவாரம் முதலியவற் றைப் பாடுவார்கள். எனக்குப் பாடவும் வராது; மத்தளம் தட்டவும் வராது. வேடிக்கை தான் பார்த்துக் கொண்டி ருப்பேன். இப்படிச் சில நாட்கள் நேரம் கழிவது கூடத் தெரியாமல் இருக்கும். வீட்டிலிருந்து என்பாட்டி என்னைத் தேடிக் கொண்டு வருவார். நான் அவர்களோடு போகா விட்டால் அம்மா அடிப்பார்கள் என்பது தெரியுமாதலால் உடனே ஒடிவிடுவேன். என்ருலும் அந்த மத்தளம் அடிப் பதைப் பார்த்துக் கொண்டிருப்பதில் தனி மகிழ்ச்சி பெற். றதை இழக்கவேண்டுமே என்ற எண்ணத்தில் வருத்தம் தோன்றும். மத்தளம் அடிக்கும் நண்பரும் மற்றவரும் அக் கலையில் வல்லவர்கள் அல்லர் ஆலுைம் எவ்வாருே என் பிஞ்சு உள்ளத்தில் அந்தப் பாட்டையும் தட்டையும் கேட்ப தில் தனி இன்பம் உண்டாயிற்று.