பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்கரைப் பொங்கல் . 59 நாளில் எங்களுர்க் கோயில் 'தர்மகர்த்தராக இருந்தவர் நான்கு பேருக்கு மேல் இருப்பர். அவர்கள் ஒருவரும் முன்னை நிலையைவிட மேல் நிலைக்கு வரவில்லையே என்ப தோடு, உள்ள நிலையிலும் தாழ்ந்துதான் போனர்கள். இன்று நன்ருகத் தெளிவுபெற்ற பின் எண்ணிப்பார்த்தேன். ஆம் உள்ளுரிலும் வெளியூரிலுமிருந்து சுமார் பத்துப்பேர் தர்மகர்த்தர்களாக வேலை பார்த்திருக்கிருர்கள். ஒருவராவது மேலே உயரவில்லை. உள்ள பொருளையும் நிலத்தையும் இழந்து கடன்காரர்களாக இருப்பதைத்தான் காண்கிறேன். இறைவனுக்கு உண்டான பொருளைக் காப்பதாகச் சொல்லிக் கொண்டே அதைச் சுரண்டும் எலிகளாக மாறிவிட்டால் அவர்கள் வாழ்வு எப்படி உயரும்? தர்ம கர்த்தராக இருந்த வர் குடும்பங்களும் வேலை பார்த்தவர்கள் குடும்பங்களும் நிலையில் தாழ்ந்தே இருக்கின்றன என்பதை ஊரில் யாரும் அறிவார். அதனுலேயே தற்போது உள்ளவரை நான் 'நீ தர்மகர்த்தாவாக இராதே. வேண்டுமானல் செயலாற்றும் அலுவலராக (Executive Officer)ப் பணியாற்று. தர்மகர்த் தாக்களோ, அன்றி அறநிலையப் பாதுகாப்பாளரோ செய்ய வேண்டும் எனப் பணித்ததைச் செய். வேறு செய்யாதே' என்று வற்புறுத்துவேன். அவரும் இன்று தர்மகர்த்தராக இல்லை. கையில் உள்ள பொங்கலோடு பல சிந்தனைகள் என் உள்ளத்தில் தோன்ற ஆற்றுக்கால்வாய்க்கரையில் உட்கார்ந் திருந்தேன். நண்பனுே பொங்கலைச் சாப்பிட்டுவிட்டு மிகவும் நன்ருக இருக்கிறது. என்ருன். என் பிஞ்ச்உள்ளமும் அதைச் சுவை பார்க்க நினைத்தது. சுவைத்தேன். நல்ல நெய், தேன், கற்கண்டு, திராட்சை இவற்றில் மூழ்கி எழுந்த அந்தச் சர்க்கரைப் பொங்கல் மிகவும் இனித்தது. என்ருலும் உள்ளத் தில் மட்டும் ஏதோ உறுத்திக் கொண்டிருந்தது.