பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 இளமையின் நினைவுகள் நான் உண்டுகொண்டே இருந்த வே ளை யி ல் என் ஊரில் இருந்த பெரியவர் ஒருவர் தம் வயல் வேலையை முடித்துக்கொண்டு குளிப்பதற்காக அங்கு வந்து உட்கார்ந் தார். நான் ஏதோ உ ண் ப ைத க் க ண் டு டே பையா ! என்னடா தின்கிருய் என்று உரிமையோடு கேட்டார். நான் பொங்கலென்று கூறி, அது வந்த விதத்தையும் சொன்னேன். அவர் அதுபற்றி வியப்படவில்லை. தர்மகர்த்தா வீட்டிற்கு 'டின் டின்கைக் கடலை எண்ணெயும் பிற பண்டங்களும் டன் டன்னக கோயில் இலுப்பை விறகும் போகும் என்றும் அவர்கள் வீட்டு வாழ்வே இதல்ை தான் நடைபெறுகிறதென் றும் கூறிச் சிரித்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இவர் என்ன அறக்காப்பாளரா அன்றி அறக்கொலைஞரா' என்று எண்ணத் தோன்றிவிட்டது. பொழுதும் போயிற்று. அதற்குள் இருட்டத் தொடங்கிவிட்டது. நான் நண்பனுடன் எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். என்ருலும் அன்று இரவெல்லாம் என்னென்னவோ நினைவுகள் உண்டாயின. அந்தக் கோயிலின் தர்மகர்த்தா வேலையின் பொருட்டே ஊர் இரண்டுபட்டது. பின்னல் பெருங் கொலைகள் நடக்கும் வகை யி ல் ஊரில் இரண்டு கட்சிகள் உண்டாகிவிட்டன. ஒவ்வொரு தேர்தல் சமயத்தில் தடிச் சண்டைகள் நடைபெறும். வெளியூருக்குச் சென்று தனி ஆளாய் வந்தால் இருட்டும் சமயத்தில் எதிர்க்கட்சி யைச் சேர்ந்த நான்கைந்து பேர் ஆந்த ஆளை நையப் புடைத்து அனுப்புவார்கள். மறுநாள் இது திருப்பி மாற்றுக் கட்சியாருக்கு வழங்கப்பெறும். இந்த நிலையில் சில நாட்கள் பெண்கள் வெளியே வரக்கூட அஞ்சுவார்கள். கோவிலுக் காக இம்மாதிரிக் கட்சிகள் பல ஊர்களில் இருக்கின்றனவாம். பணம் உள்ள கோயிலாயின், அங்கே வேளாளரும் குடி யிருப்பார்களாயின், கட்டாயம் அந்த ஊர் இரண்டுபடும்