பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 இளமையின் நினைவுகள் பகை குட்டி உறவோ என்றெல்லாம் கூறினர்கள். அந்த எதிர் வீட்டுப் பாட்டி வந்து தானே அழைத்ததாகச்சொல்லிச் சமாதானம் செய்தும் கேட்கவில்லை. எனது தாயார் இந்த வகையில் கண்டிப்பாக இருப்ப தற்குக் காரணங்கள் காட்டுவார்கள். இரவு என்னைச் சாப் பிடச் சொன்னர்கள். நான் உடம்பெல்லாம் வலிக்கிறது என்றும் சாப்பாடு வேண்டாம் என்றும் அழுதேன். அடித்த கிை அணத்தது. "எல்லாம் உன் நன்மைக்குத்தானே செய் கிறேன்; எனக்கு வேறு யாராவது இருக்கிருர்களா? உள் ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். ஆமாம். மனதிலே வஞ்சகம் வைத்து மேலுக்கு உறவாடுபவர் யாராயினும் நம்பக்கூடாது. நன்ருகத்தெரிந்து கொள். உள்ளத்தில் பகை வைத்து உறவாடுகிற கொடிய வர்களைக் காட்டிலும் நேருக்கு நேர் நிற்கும் கொலைக்கார விரோதி எவ்வளவோ மேல். அன்று பங்கிடும்போது உனக் குப் பால் கொடுத்த வெள்ளி மூக்குச்செம்பைப் பையனுக்குத் தனியாகக் கொடுத்துவிடலாம் என்று பஞ்சாயத்துக்காரர் கூறியதை மறுத்து அவள் வாதாடி அதையும் பங்கிடும் பொருளில் வைத்தாளே ! அன்றில்லாத கரிசனம் இப்போது எப்படி மிட்டாயில் வந்தது? கண்ணே அழாதே! யாரிட மும் மணமறியாது பழகக் கூ டா து” என்று சொல்லிக் கொண்டே கையால் அள்ளிச் சோற்றை ஊட்டினர்கள். என் அன்பான பாட்டி தூணில் சாய்ந்து உட்கார்ந்தபடியே இந்தக் காட்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும், ஒன்னர் அழுத கண்ணிரும் அனைத்து' என்ற வள்ளுவர் குறள் எனக்கு அன்று தெரியாது. என்ருலும் மதியாதார் முற்றம் மதித்து மிதிக்கலாகாது என்பதும், ஒரு முறை மாறுபட்டாரோடு