பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 இளமையின் நினைவுகள் கொள்ளப் போகிருர். நேற்று அவர்கள் என்னை அழைத்து அந்த நிலத்தை நாலாயிரத்து இருநூறு ரூபாய்க்கு முடித்து உடனே பத்திரம் எழுதுமாறும் சொன்னர்கள். அதைச் சொல்லவே நான் இப்போது வந்தேன்' என்ருர். அப்பா அம்மா அனைவருக்குமே அச் சொற்கள் வியப்பைத் தந்தன என்னலாம். ‘என்ன! எனக்கு ரூபாய் வேண்டுமென் றும் நிலம் வாங்கப் போவதாகவும் சொன்னேன். அதற் குள் இப்படி மாறிவிட்டார்களா?' என்று அவர்களுக்கு இயல் பான முறையில் பலப்பல வார்த்தைகளைக் கொட்டிப் பேசி ர்ைகள். உடனே ஆவேசம் வந்தவர் போல் அது என்ன வானுலும் சரி. நிலத்தை விடாதீர்கள். நமக்கே முடியுங்கள் நாலாயிரத்து நானுறுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்ருர் என் அன்னையார். ஆல்ை அருகிலிருந்த பாட்டியார் மட் டும் பார்த்துக் கொண்டு இருந்து வள்ளிம்மா! விட்டுத் தள்ளு. இந்த நிலம் வந்து நமக்கு ஆகப் போவது ஒன்று மில்லை. மீனுட்சிதான் வாங்கிக் கொள்ளட்டுமே என்ருர்கள். ஆம். முதலிலேயே சொல்ல மறந்து விட்டேன். எனது தாயார் பெயர் வள்ளியம்மை, பெரியம்மா பெயர் மீட்ைசி அம்மாள். பாட்டி சொன்னதை அம்மா காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. வந்தவரிடம் நாலாயிரத்து நானூ றுக்கு முடியுங்கள் என்று திட்டமாகச் சொல்லி விட்டார். அவரும் சிரித்துக் கொண்டே சென்று விட்டார். அந்த விலை உயர்வில் அவருக்கும் பங்கு உண்டு என்ற உண்மை நெடுநாட்களுக்குப் பிறகுதான் தெரிந்தது. நிலம் கொடுப் பவரும் உடன் பிறந்தவர் போட்டியில் தாம் நிறையப் பொருள் பெறலாம் என்ற முடிபுக்கு வந்து விட்டார். நான்கு நாட்கள் சென்றன. இதற்கிடையில் என் தாயாருக்கும் பெரியம்மாவுக்கும் இருந்த பேச்சு உறவு மறு படியும் முறிந்தது; வேறுபாடு அதிகமாயிற்று. ஒருவரை