பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இளமையின் நினைவுகள் றங்கள் ஏறி, வழக்கறிஞர்களுக்கு ஆயிரக்கணக்கில் கொட் டிக்கொடுக்க நினைக்கும் உடன் பிறந்த உள்ளம் தன் தம்பிக்கோ அண்ணனுக்கோ ஐந்தடி நிலத்தை இனமாக விட்டுக் கொடுக்க மறுக்கிறது. இந் த நி லை இன்றும் வளர்ந்துகொண்டே போகிறது என்பதை எண்ணிக்கையில் வளர்ச்சியுறும் நீதி மன்றங்கள் காட்டவில்லையா? என் வீட்டு நிலப்போட்டி இந்த அளவோடு முடிந்து விடவில்லை. ஊரில் யாரோ எனது பெரியம்மாவை நன்ருகத் தூண்டி விட்டார்கள் போலும். அந்த நிலத்தை எப்படி யாவது ஒரு வருடமாவது நீங்கள் பயிரிடவேண்டும் என் ருர்கள். அது எப்படி முடியும் என்பதற்கும் அவர்களே. வழி சொல்லிக்கொடுத்தார்கள். அந்த நிலம் அடைமானத் துக்கு வைத்தபோது ஐந்து ஆண்டுகளுக்கு என்று வைக் கப்பட்டதாம். அப்போது நான்கு ஆண்டுகளே முடிந்து இருந்தன. ஒராண்டு எஞ்சி இருந்ததாம், அந்தப் பணத் தைச் சென்னையிலுள்ள அவர்களுக்குக் கொடுத்து விட்டால் அதே ஆண்டில் நிலத்தை அவர்கள் உழலாமாம். அந்த நிலையில் அவர்களுக்குச் சொந்தமான உழவுத் தொழிலும், கிடையாது. அல்லது அதில் வருகின்ற நெல்லை வைத்துத் தான் சாப்பிடவேண்டும் என்ற நிலையும் இல்லை. எப்படி யிருந்த போதிலும் ஒராண்டாவது அந்த நிலம் தம் ஆணை யின் கீழ் இருந்ததாகக் காட்டவேண்டும் என விரும்பினர்கள் எனது பெரியம்மா. எனவே ஊரில் முக்கியமாக அந்நிலத் தோடு சம்பந்தப்பட்டவரை அழைத்துக்கொண்டு, பெரி யப்பா சென்னைக்குப் பயணமானர். இரண்டொரு நாளில் பணம் கட்டிப் பத்திரத்தைத் தம்பேரில் மாற்றிக்கொண்டு வந்துவிட்டார்கள். அடுத்த வீட்டுத் திண்ணையில் கம்பீர மாக உட்கார்ந்துகொண்டு தாம் வெற்றிபெற்றதைத் தம் நண்பருடன் பெரியப்பா பேசிக்கொண்டிருந்தார். எனது