பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு ரூபாய் நோட்டு 85 சொல்வார்கள், அம்மா சிறிது நேரம் வசைபாடிவிட்டுப் பிறகு அமைந்துவிடுவார்கள். அன்றுதான் உண்மையிலே அவர் தொடவில்லையே ஆகவே எவ்வளவோ மன்ருடிச் சொன்னர்கள். தாம் ஒன்றையுமே பார்க்கவில்லை எனவும், பார்த்திருந்தால் பத்து ரூபாயுமே தாம் எடுத்துக்கெர்ண் டிருக்க முடியும் எனவும் பலமுறை விளக்கிச் சொன்னர்கள். அம்மா அவற்றைக் கேட்டதாகவே தெரியவில்லை. மேலும் மேலும் வசைம்ொழிகளை வீசிக்கொண்டே இருந்தார்கள். அப்பாவாலும் பொறுக்கமுடியலில்லை. என்ன செய்வது? அந்நேரவேளையில் நான் உண்மையைச் சொல்லிவிடலாமா என் நினைத்தேன். எனது படுக்கையில் கண்ணை மூடிக் கொண்டே படுத்திருந்தேன். இரண்டொருமுறையில் அப்பாவின் பரிதாப நிலையைக் கண்டு, உண்மையைச் சொல்லிவிட்டு, அந்த ரூபாயையும் எடுத்துக் கொடுத்து விடலாம் என் நினைத்து எழுந்து உட்கார்ந்தேன். ஆயினும் அப்படிச் செய்தால் அம்மா என்னை எப்படி அடிப்பார்கள் என்பத்ை நினைக்கும்போது மறுபடியும் திரும்பப் படுத்துக் கொண்டேன். பிறகு அப்பா அம்மா சாப்பிட்டார்களா இல்லையா என்பதுகூட என்க்குத் தெரியாது. இரவெல்லாம் எத்தனையோ கனவுகள் கண்டதாக நினைவு. பக்கத்தில் பாட்டியார் நான் தூக்கத்தில் திடுக்கிடுவதைக் கண்டு தட்டித்தட்டி உறங்கவைத்தார்கள் என்று எண்ணுகிறேன். மறுநாள் பொழுது விடிந்தது. புயல் ஒய்ந்துதான் இருந்தது. அப்பா வெளியே சென்றுவிட்டார். பாட்டியும் பூந்தோட்டத்திற்குப் போய்விட்டார்கள். நான் மெள்ள எழுந்து அம்மாவிடம் சென்றேன். என் உள்ளத்தில் கள்ளம் குடிகொண்டிருந்தது. அப்போதாவது சொல்லி விடலாமா என நினைத்தேன். எப்படிச் சொல்லுவது? எப்படி அடி உதை வாங்கிக்கொள்வது? விரைவில் காலைக்