உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கருவுற்ற பெண்மணி

29

உடுத்தும்‌ புடைவையை உடுத்தியிருந்தாள்‌. சிஞ்சா மாணவிகை என்னும்‌ பெயருள்ள அந்தத்‌ துறவிப் பெண்ணை அவ்வூரார்‌ நன்கறிவார்கள்‌. புத்த சமயத்திற்கு மாறுபட்ட, வேறு சமயத்தைச்‌ சேர்ந்தவள்‌ அவள்‌. பெருமான்‌ புத்தரின்‌ அண்மையிலே அவள்‌ வந்து நின்ற போது, அங்கிருந்தவர்கள்‌ “இவள்‌ ஏன்‌ இங்கு வந்து நிற்கிறாள்‌! புத்தருடைய கொள்கையை இவள்‌ மறுத்துப்‌ பேசப் போகிறாளா? சமயச் சொற்போர்‌ செய்ய வந்திருக்கிறாளா?” என்று தமக்குள்‌ எண்ணினார்கள்‌. அவள்‌ என்ன சொல்லப் போகிறாள்‌ என்பதை அறிய, எல்லோரும்‌ ஆவலாக நோக்கினார்கள்‌.

அவள்‌ புத்தரைப்‌ பார்த்து, இவ்வாறு சொன்னாள்‌: “தலைவரே! விரிவுரையைச்‌ சற்று நிறுத்துங்கள்‌. நான்‌ கேட்பதற்கு முதலில்‌ விடை கூறுங்கள்‌.” பிறகு அவள்‌ தன்‌ சூல்‌ கொண்ட வயிற்றைச்‌ சுட்டிக் காட்டி, மேலும் பேசினாள்‌. “என்னை இந்த நிலையில்‌ விட்டு விட்டுத்‌ தாங்கள்‌ அறவுரை போதித்துக் கொண்டிருந்தால்‌, என்‌ ௧தி என்னாவது? எனக்கு என்ன வகை செய்தீர்கள்? இன்னும்‌ சில நாட்களில்,‌ குழந்தை பிறக்கப் போகிறது. பிள்‌ளைப் பேற்றிற்குத்‌ தகுந்த ஏற்பாடுகளைச்‌ செய்து கொடுங்கள்‌,” என்று கூறினாள்‌. அவள்‌ தன்னை எல்லாரும்‌ காணும்படி அங்கு நின்றாள்‌. அவள்‌ பேசியதைக்‌ கேட்ட புத்தர்‌ ஒன்றும்‌ மறுமொழி கூறாமல்‌, மௌனமாக இருந்தார்‌.

கூட்டத்தில்‌ ஒரே அமைதி காணப்பட்டது. ஆனால்‌, எல்லோருடைய உள்ளத்திலும்‌ பரபரப்பும்‌, கொந்தளிப்பும்‌ ஏற்பட்டன. வியப்பும்‌, திகைப்பும்‌, பல வித எண்ணங்களும்‌ எல்லாருடைய மனத்தையும்‌