30
இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்
அலைக்கழித்தன. எல்லோரும் அவளைப் பார்த்தார்கள். சூல் கொண்ட பெண்ணாக அவள் காணப்பட்டாள். பெரிய அவையிலே, பலர் முன்னிலையிலே, பெருமான் புத்தர் மீது குற்றம் சாட்டுகிறாள். அவள் கூறுவது உண்மையாயிருக்குமோ? புத்தருக்கும், அவளுக்கும் தொடர்பு — கூடா ஒழுக்கம் — உண்டோ? இந்தத் தொடர்பின் பயனாக இவள் வயிறு வாய்த்துச் சூல் கொண்டாளோ? இஃது உண்மையாயிருக்குமோ? இதற்குப் புத்தர் என்ன விடை கூறப் போகிறார்?
புத்தர் மெளனமாக இருந்தார். அவர் மெளனமாக இருந்தது, அவள் சாற்றிய குற்றத்தை ஒப்புக் கொண்டது போல, அங்குள்ளவருக்குத் தோன்றியது.
அப்போது மேலும் அவள் பேசினாள்: “ஏன் மெளனமாக இருக்கிறீர். என்னை ஒரு குழந்தைக்குத் தாயாக்கி விட்டு, இந்த நிலையில் என்னைத் திக்கற்றவளாக விடுவது அழகா? என் பிள்ளைப் பேறுக்காகவும், மருத்துவத்திற்காகவும் வழி வகை செய்து கொடுங்கள்.”
இதைக் கேட்டுப் புத்தர், மேலும் மெளனமாகவும், அமைதியாகவும் இருந்தார். புத்தர் மெளனமாக இருந்தது, சிஞ்சா மாணவிகை கூறியது உண்மை என்று ஒப்புக் கொள்வது போல, அங்கிருந்தவர்களுக்குத் தோன்றியது. அவள் மீது இரக்கமும், புத்தர் மீது வெறுப்பும் அக்கூட்டத்திலிருந்தவர்களில் பலருக்கு ஏற்பட்டன. தலைவர் புத்தர் மேல் இருந்த நல்லெண்ணமும், உயர்ந்த மதிப்பும் அங்கிருந்தவர்களில் பலருக்கு இல்லாமல் போயின. இதனால் எல்லார்