கருவுற்ற பெண்மணி
31
உள்ளத்திலும் ஒரு விதப் பரபரப்புத் தோன்றியது. ஆனால், கூட்டத்தில் அமைதி நிலவியது.
புத்தர் மெளனமாக இருந்தது, சிஞ்சா மாணவிகைக்கு மேலும் ஊக்கம் அளித்தது. அவள் “ஏன் பேசாமல் இருக்கிறீர்? எனக்கு ஒரு வழி செய்து கொடுங்கள்” என்று கூறினாள்.
புத்தர் பெருமான் அப்போதும் மெளனமாகவும், அமைதியாகவும் இருந்தார்.
அப்பெரிய கூட்டத்திலே, பெண்மணிகள் அமர்ந்திருந்த இடத்திலே, சற்று வயது சென்ற அம்மையார் ஒருவர் எழுந்து நின்றார். எல்லோருடைய பார்வையும் அந்த அம்மையாரிடம் சென்றன. அம்மையார் இவ்வாறு கேட்டார்: “சிஞ்சா மாணவிகையே! உங்களுக்கு எத்தனை மாதச் சூல்?”
“ஒன்பது திங்கள் நிறைந்து விட்டன. இது பத்தாவது திங்கள்.”
இவை வேண்டப்படாத கேள்வியும், விடையும் என்று எல்லோரும் எண்ணினார்கள்.
மூதாட்டியார், “இல்லை. உனக்குச் சூலே இல்லை. நீ பொய் சொல்லுகிறாய்! வீணாகப் பொய்க் குற்றம் சாட்டுகிறாய்!”
மூதாட்டியார் கூறியது, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் தோன்றிற்றுப் பலருக்கு. வயிற்றைப் பார்த்தாலே தெரிகிறதே, முழுச் சூல்