32
இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்
என்று இல்லை என்று சொல்லுகிறார் அம்மையார். இஃது என்ன பித்துக் கொள்ளித்தனம்?
மூதாட்டியார், சிஞ்சா மாணவிகை அண்மையிற் சென்றார். சிஞ்சா மாணவிகை, “அண்மையில் வராதே, தூரத்தில் நில்” என்றாள். அம்மையார் நிற்கவில்லை. அண்மையில் சென்றார். கர்ப்பவதி, அம்மையாரைத் தள்ளினாள். அம்மையார் அவள் வயிற்றைத் தடவிப் பார்த்தார். மாணவிகை தன்னைத் தொட விடாமல், இடையூறுகள் செய்தாள். அம்மையார் விடவில்லை. இருவருடைய சச்சரவுக்கிடையே, மாணவிகையின் வயிற்றிலிருந்து, ஒரு கனத்த பொருள் தொப்பென்று கீழே விழுந்தது. அம்மையார் அந்தப் பொருளைக் கையில் எடுத்தார்; அது திரண்டு, அரை வட்ட வடிவமாகச் செய்யப்பட்ட ஓரு மரத் துண்டு! அம்மையார் அதைக் கையில் பிடித்து, உயரத் தூக்கிக் காட்டி, “இதோ பாருங்கள், இதுதான் சஞ்சா மாணவிகையின் ஒன்பது மாதச் குல்” என்று கூறினார்.
அதே சமயத்தில், சஞ்சா மாணவிகையின் வயிறு சுருங்கிக் காணப்பட்டது. அவள் ‘உப்புக்கண்டம் பறி கொடுத்த பார்ப்பனியைப் போலத்’ திகைத்தாள்.
அம்மையார் கூறினார்: “இவள் இந்த மரக் கட்டையை வயிற்றில் கட்டிக் கொண்டு, சூல் கொண்டவள் போல நடித்துப் புத்தர் மேல் வீணாகப் பழி சுமத்துகிறாள். இப்போது இவள் வயிற்றைப் பாருங்கள். வயிற்றில் சூல் இல்லையே. அஃது எங்கே போயிற்று? இவளைப் பார்க்கும் போதே தெரியவில்லையா, இவளுக்குச் சூல் இல்லை என்று? சூல் கொண்டவர்களுக்கு, முகத்திலும், மற்ற உறுப்புகளிலும் மாறுதல்கள் ஏற்படுவது