கருவுற்ற பெண்மணி
33
வழக்கம். அப்படிப்பட்ட மாறுதல்கள் இவள் உடம்பில் இல்லையே! இவள் நீலி! பழிகாரி!” என்று கூறினார்.
கூட்டத்தினருக்கு ஆத்திரம் உண்டாயிற்று.
“மோசக்காரி”, “சண்டாளி”, “பழிகாரி”, “துரத்துங்கள் அவளை”, “விரட்டியடியுங்கள்”, “பெரும் பாவி”.
மக்கள் இப்போது உண்மையைத் தெரிந்து கொண்டார்கள். அமைதி கலைந்து, கூச்சலும், சந்தடியும் ஏற்பட்டன. சிஞ்சா மாணவிகை, கூட்டத்தை விட்டு ஓடினாள். மக்கள் அவளை விரட்டித் துரத்தினார்கள். ‘தலை தப்பினால், தம்பிரான் புண்ணியம்’ என்று அவள் விரைவாக ஓடி விட்டாள்.
சிஞ்சா மாணவிகை, வேறு சமயத்தைச் சேர்ந்த துறவி. புத்த மதம் சிறப்படைந்து, செல்வாக்கடைந்திருப்பதைக் கண்டு, பொறாமை கொண்ட வேறு சமயத் துறவிகள், தலைவர் புத்தர் மீது வீண் பழி உண்டாக்கி, அவருடைய சமயத்தை அழிக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன், சிஞ்சா மாணவிகையை ஏவி, இவ்வாறு அவதூறு சொல்லச் செய்தார்கள். ஆனால், அவளே மானமிழந்து, அங்கிருந்து ஓடினாள்.
இ.பு.௧.—3