உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொலைக்‌ குற்றம்‌

35

கொண்டிருந்த போது, சுந்தரி எதிரில்‌ வந்து கொண்‌டிருந்தாள்‌. அவர்கள்‌ வியப்படைந்து “எங்குச்‌ சென்று வருகிறீர்‌?” என்று கேட்டார்கள்.‌ “கௌதமரிடம்‌ இருந்து வருகிறேன்‌. இராத்திரி அங்குத்‌ தங்கியிருந்‌தேன்‌,” என்று கூறினாள்‌. அன்று மாலையிலும்‌, சுந்தரி அவர்களுக்கு முன்‌ எதிர்ப்பட்டாள்‌. “எங்குப்‌ போகிறீர்கள்‌ அம்மா?” என்று கேட்டார்கள்‌. “கௌதம முனிவரிடம்‌ போகிறேன்‌. இரவு முழுவதும்‌ அங்கே தங்கியிருப்பேன்‌,” என்று விடை கூறிச்‌ சென்றாள்‌.

அடுத்த நாள்‌ காலையிலும்,‌ அவள்‌ அவர்களுக்கு முன்‌ எதிர்ப்பட்டாள்‌. “எங்கிருந்து வருகிறீர்கள்‌?” என்று கேட்டார்கள்‌. “ஏன்‌? கௌதம முனிவரிடம்,‌ இரவில்‌ தங்கி விட்டு வருகிறேன்‌” என விடை கூறிச்‌ சென்றாள்‌.

இவ்வாறு பல நாள்கள்‌ சென்‌றன. ஓவ்வொரு நாளும்‌, சுந்தரி காலையிலும்,‌ மாலையிலும்‌ மக்கள்‌ வரும்‌ போதும்‌, போகும் போதும்‌ எதிர்ப்பட்டாள்‌. எதிர்ப்‌படும்‌ போதெல்லாம்,‌ அவர்கள்‌ சுந்தரியை, “எங்கே போகிறாய்‌? எங்கிருந்து வருகிறாய்‌?” என்று கேட்‌பார்கள்‌. “கௌதம புத்தரிடம்‌ போகிறேன்‌; இரவில்‌ அவருடன் தங்கியிருப்பேன்”, “கௌதமரிடமிருந்து வருகிறேன்‌, இரவில்‌ அவருடன்‌ தங்கியிருந்தேன்‌” என்று அவள்‌ விடை கூறுவாள்‌. மக்கள்‌ பலவாறு பேசத்‌ தலைப்பட்டார்கள்‌. இவளுடைய வயது, அழகு, எடுத்துச்‌ செல்லும்‌ பொருள்கள்‌, செல்லும்‌ நேரம்‌, திரும்பும்‌ காலம்‌ இவையெல்லாம்‌ மக்கள்‌ மனத்தில்‌ ஐயம்‌ உண்டாக்கி விட்டன ‘துறவியாகிய சுந்தரிக்கும்‌