கொலைக் குற்றம்
37
அரண்மனையையடைந்து, அரசன் அவைக்களம் சென்றார்கள். “எங்கள் சமயத்தைச் சேர்ந்தவளாகிய, சுந்தரி என்னும் பெண் துறவியைப் புத்த சமயத் துறவிகள் கொலை செய்து, குப்பை மேட்டில் போட்டு விட்டார்கள். இது முறையா? தகுமா?” என்று முறையிட்டார்கள்.
“ஏன் கொலை செய்தார்கள்?” என்று. கேட்டார் அரசர்.
“சுந்தரி அழகுள்ள பெண். அவளுக்கும், கௌதம புத்தருக்கும் சில காலமாகக் கூடாவொழுக்கம் ஏற்பட்டிருந்ததாக, ஊரில் பேசிக் கொண்டார்கள். அந்தக் குற்றத்தை மறைப்பதற்காக, அவருடைய மாணவர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள்,” என்று கூறினர் சமயவாதிகள்.
“இன்னார் கொலை செய்தார் என்பதற்குச் சான்று ஏதேனும் உண்டோ?”
“இல்லை. இன்று காலையில் சுந்தரியின் பிணம், புத்த சமயத் துறவிகளுடைய குப்பை மேட்டில் கிடக்கிறது என்று கேள்விப்பட்டோம். போய்ப் பார்த்தோம். அங்கே பிணம் கிடக்கிறது”, என்றார்கள்.
“நல்லது! குற்றவாளிகளைக் கண்டு பிடித்துத் தண்டிப்பது எங்கள் வேலை. நீங்கள் போய், உங்கள் சமயத்துச் சுந்தரியின் பிணத்தை அடக்கம் செய்யுங்கள்” என்று கூறினார் அரசர்.
சமயவாதிகள் திரும்பி வந்து, சுந்தரியின் பிணத்தை அடக்கம் செய்வதற்காகச் கடுகாட்டிற்கு. ஊர்வலமாகக்