கொலைக் குற்றம்
41
பணம் கொடுத்துக் கொலை செய்யச் சொன்ன துறவிகள் இன்னின்னார் என்பதையும் அவர்கள் கூறினார்கள். அந்தத் துறவிகள் நீதி மன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டு, கேள்வி கேட்கப்பட்டனர். அவர்கள், முதலில் தங்களுக்கு ஒன்றும் தெரியாதென்று கூறினார்கள். ஆனால், தப்ப முடியவில்லை.
இவர்கள்தாம் தங்களை மறைமுகமாக அழைத்துச் சுந்தரியைக் கொலை செய்யும்படி. தூண்டினார்கள் என்று, கொலை செய்தவர்கள் சான்றுகளோடு கூறினார்கள். கடைசியில், துறவிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள். “தங்கள் சமயத்தைச் சேர்ந்த துறவியாகிய சுந்தரியை, நீங்களே கொலை செய்யச் செய்ததின் காரணம் என்ன?” என்ற கேள்விக்குப் புதுமையான விடை கிடைத்தது.
புத்த சமயத்துக்கு நாட்டில் பெரிய செல்வாக்கும், மதிப்பும் இருக்கிறபடியினாலே, தங்கள் மதத்தை மக்கள் முன் போல் மதிப்பதில்லை. ஆகையினாலே, புத்த மதத்துத் தலைவராகிய புத்தர் மேல் கூடாவொழுக்கப் பழி சுமத்தி, அவர் செல்வாக்கைக் குறைக்க வேண்டுமென்று அவர்கள் கருதினார்களாம். அதற்குச் சுந்தரியின் உதவியை நாடினார்களாம். அவளும், அதற்கு உடன்பட்டு, நாட்டிலே பொய் வதந்தியை உண்டாக்கினாள். தனக்கும், புத்தருக்கும் கூடாவொழுக்கம் உண்டு என்பதாக மக்களைக் கருதும்படி செய்தாள். மக்களில் பெரும்பான்மையோர் இந்த அலர்மொழியை நம்பினார்கள்.
இந்தச் சமயத்தில் சுந்தரியைப் பௌத்தர்கள் கொலை செய்து விட்டார்கள் என்று மக்கள் நம்பினால்,