உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள்ளரை நல்லவராக்கிய காத்தியானி‌

57

துண்பதும், தனியே இருந்து மனத்தை அடக்கத்‌ துறவு வாழ்க்கையைச்‌ செலுத்துவதும்‌ கடினமானது என்பதை அவனுக்கு விளக்கிக்‌ கூறினார். சோணன்‌ குட்டிக்‌ கண்ணன்‌ விடவில்லை. மீண்டும்‌ சென்று, தனக்குத்‌ துறவு நிலையையளிக்க வேண்டும்‌ என்று வேண்டினான்‌. மீண்டும்‌ அவர்‌ மறுத்தார்‌. மற்றும்‌ ஒரு முறை வேண்டினான்‌. அப்போதும்‌ மறுத்து விட்டார்‌.

குட்டிக்‌ கண்ணன்‌ இளைஞனான போதிலும், உறுதியான உள்ளம்‌ உடையவன்‌. ஆகவே, எப்படியாவது, தான்‌ புத்த சமயத்‌ துறவியாக ஆக வேண்டும்‌ என்று உறுதி செய்து கொண்டான்‌. அதனால்‌, மறுபடியும்‌ அவரிடம்‌ சென்று, கட்டாயம்‌ தன்னை மாணவனாக்கிக்‌ கொள்ளும்படி வேண்டினான்‌. இவனுடைய மனவுறுதியைக்‌ கண்ட தேரர்‌, ஒருவாறு இணங்கி, அவனை மாணவனாக்கிக்‌ கொள்ளுவதாகவும்‌, சில ஆண்டு கழித்துத்‌ துறவறத்தில்‌ சேர்ப்பதாகவும்‌ கூறி, அவனை மாணவனாக்கிக்‌ கொண்டார்‌. அவன்‌ மூன்று ஆண்டு அவரிடம்‌ மாணவனாக இருந்தான்‌. இந்த மூன்று ஆண்டுக்குள்,‌ புத்தருடைய அறிவுரைகளில்‌ இன்றியமையாதவற்றை மனப்பாடஞ்‌ செய்து கொண்டதோடு, அவற்றின்‌ கருத்தையும்‌ தெள்ளத்‌ தெளிய ஓதி, உணர்ந்‌தான்‌. அன்றியும்‌, அறவுரைகளை ஓதி, விரிவுரை செய்யவும்‌ கற்றுக் கொண்டான்‌.

இவ்வாறு புத்த சமய மறைகளை ஓதியுணர்ந்த குட்டிக் கண்ணர்‌, மூன்றாண்டுக்குப்‌ பின்னர்‌, ஆசிரியரிடம்‌ விடை பெற்றுப்‌ புத்தரை வணங்கச்‌ சென்றார்‌. அவந்தி‌ நாட்டைக்‌ கடந்து, வெகு தொலைவிற்-