உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்

கப்பாலுள்ள சேதவனத்தை அடைந்தார்‌. அங்குப்‌ புத்தர் எழுந்தருளியிருந்த கந்தகுடியில்‌ சென்று புத்தர்‌ பெருமானைக்‌ கண்டு, அடி வணங்கித் தொழுதார்‌. புத்தர்‌ அவரை அன்புடன்‌ வரவேற்றார்‌. குட்டிக்‌ கண்ணர்‌ கந்தகுடியிலே தங்கினார்‌. வைகறைப்‌ பொழுதில்‌ விழித்தெழுந்து, புத்தரின்‌ உத்தரவு பெற்றுத்‌ தாம்‌ ஓதியுணர்ந்த புத்த மறையை நன்கு ஓதினார்‌. இவர்‌ ஓதிய முறையையும்,‌ தெளிவையும் கருத்தூன்றிக்‌ கேட்டருளிய புத்தர்‌, இவரைப்‌ பெரிதும்‌ புகழ்ந்து, வியந்து மகிழ்ந்தார்‌. அங்கிருந்த மற்றத்‌ தேரா்களும்‌ புகழ்ந்து பாராட்டினார்கள்‌. இதனால்,‌ இவருடைய புகழ்‌ நாடெங்கும்‌ பரவிற்று. அவந்தி நாட்டிலே, கூரராக நகரத்திலே இருந்த இவருடைய அன்னையார்‌ காத்தியானி அம்மையார்‌ காதிலும்‌ இவருடைய புகழ்‌ எட்டிற்று. ‘என்‌ மகன்‌ இந்த ஊருக்கு வருவானானால்‌, அவனிடம்‌ அறவுரை கேட்க வேண்டும்‌,’ என்று அம்மையார்‌ தமக்குள்‌ கூறிக்‌ கொண்டார்‌.

சோணன்‌ குட்டிக்‌ கண்ணர்‌, சில நாள்கள்‌ பெருமான்‌ புத்தரிடம்‌ தங்கியிருந்து, அவர்‌ திருக்‌கைகளினாலே சீவரம்‌ பெற்றுத்‌ துறவியானார்‌. பின்னர்‌, மீண்டும்‌ அவந்தி நாட்டிற்கு வந்து, தம்‌ ஆசிரியரான மகா கச்சானரிடம்‌ தங்கியிருந்தார்‌. இருவரும்‌ வழக்கம்‌ போல, நகரத்தில்‌ சென்று இல்லங்களில்‌ உணவுப்‌ பிச்சை ஏற்று வந்தனர்‌.

ஒரு நாள்‌ கர்த்தியானி அம்மையார்‌ இல்லத்திற்‌ சென்று பிச்சை ஏற்றனர்‌. அவர்களுக்கு அம்மையார் உணவளித்த பிறகு, தாம்‌ நெடுகாளாகக்‌ கருதியிருந்த