பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 4

கணக்கில்லை. சில மத்ாலாக்களில் பொதுவான மார்க்கக் கல்வியும், வற்றில் குறிப்பிட்ட வகை மார்க்கக் கல்வியும் போதிக்கப்படுகின்றன.

இவற்றைத் தவிர மத்ரஸ்துன் நிஸ்வான்' என்ற பெயரில் பெண்களுக் கென்றே பல மத்ரஸாக்கள் நடை பெற்று வருகின்றன.

மத்ஹப்: மத்ஹப்' என்ற அரபிச் சொல்லுக்கு வழி என்பது பொருளா கும். இஸ்லாமியத் திருமறையான திருக்குர்ஆன் இறைவனால் மனித குலத்துக்கு வழங்கிய இறைச் சட்ட மாகும். இச்சட்டத்துக்கு நடைமுறை வாழ்வியலுக்கான விளக்கங்களாக அமைந்தவை பெருமானாரின் வாழ்

வையும் வாக்கையும் ஆதாரமாகக் கொண்ட ஹதீஸ்கள். திருக்குர்ஆனை யும் ஹ தீ ைஸ யு ம் ஆதாரமாகக்

கொண்டு வகுக்கப்பட்ட இஸ்லாமியச் சட்ட திட்டங்களே பிக்ஹ' சட்டங் கள். இதனை வகுத்துத் தொகுத்தவர் கள் எண்மர் ஆவர். அவர்கள் பிக்ஹா சட்ட அடிப்படையில் சிறுசிறு வேறு பாடுகளோடு கூடிய எட்டு மத்ஹபு களை உருவாக்கினர். இவற்றுள் நான்கு மத்ஹபுகள் அதாவது வாழ்வியல் வழி முறைகள் உலக முஸ்லிம்களால் பின் பற்றப்பட்டு வருகின்றன. அவை யாவன: ஹனஃபி, ஷாஃபி, மாலிக், ஹன்பலி ஆகியனவாகும். நான்கு இமாம்களின் பெயராலேயே இந்த மத்ஹபுகள் அமைந்தள்ளன. அவை:

1. வரனஃபி மத்வரப் இந்த மத்ஹபை அபூ யூசுப் முஹம்மது ஆகியோரின் துணையுடன் இமாமுல் அஃலம் அபூ ஹனிஃபா (ரஹ்) வகுத்தமைத்தார். இந்த மத்ஹபைச் சார்ந்த முஸ்லிம் களே இன்று உலகில் பெரும்பாலோ ராக வாழ்கின்றனர். இம்மத்ஹபைச் சார்ந்தோரின் உலக எண்ணிக்கை

மத்ஹப்

சுமார் ஐம்பது கோடியாகும். இவர்கள் இந்தியா, துருக்கி, பாகிஸ்தான், அப் கானிஸ்தான், ஜோர்டான் போன்ற நாடுகளில் வாழ்கின்றனர்.

2. ஷாஃபி மத்ஹப். ஹனஃபி மத் புக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் பின் பற்றும் மத்ஹப் இதுவாகும். சுமார் முப்பது கோடிப்பேர் இதனைப் பேணி இவர்களில் பெரும் எண்ணிக்கையினர் பல ஸ் தி ன ம், எகிப்து, லெபனான், ஈராக், சவூதி அரேபியா, யமன், இலங்கை மற்றும் இந்தியாவின் மலையாளக் கடற்கரை களிலும் தமிழ்நாட்டின் கிழக்குக் கடற் கரைகளிலும் வாழ்கின்றனர்.

நடக்கின்றனர்.

3. மாலிக் மத்வரப்: இம் மத்ஹப் இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) அவர் களால் ஏற்படுத்தப்பட்டது. இந்த மத் பை சூடான், துனிஸ், மொராக் கோ, அல்ஜீரியா, பஹ்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் பத்துக் கோடி முஸ்லிம்கள் பின்பற்றுகின்றனர்.

4. வரன் பலி மத்வரப்: உலகில் முந்தைய மூன்று மத்ஹபு காட்டிலும் குறைவானவர் களால் பின்பற்றப்படுகிறது இம் மத்ஹபை உருவாக்கியவர் இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) ஆவார். லெபனான், சிரியா, சவூதி அரேபியாவின் சில பகுதிகளில் வாழும் ஒரு கோடிப் பேர் இம்மத்ஹபைப் பின் பற்றுகின்றனர்.

ன்பலி மத்ஹபு

களைக்

நான்கு இமாம்களும் அறிவாற்றல் மிக்கவர்கள். அவர்கள் தத்தம் சிந்த னைத் திறனுக்கேற்ப நான்கு மத்ஹபு களை உருவாக்கி உள்ளனர். இந்நான்கு மத்ஹபுக்களுக்கிடையே சிறுசிறு வேறு பாடுகளே உள்ளன. இஸ்லாமிய அடிப் கோட்பாடுகளில் எவ்வித மாற்றமும் இல்லை. இஸ்லா

படைக்கொள்கை,