பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 to

மகிழ்ந்த முஹம்மது பின் துக்ளக் இவ ைர த் த ம் அமைச்சராக ஆ க் கி க் கொண்டார். சில ஆண்டுகள் காஜியா கவும் பணியாற்றி உள்ளார். இவர் தமிழகம் வந்து பயணம் செய்துள்ளார். இவர் தமிழகம் வந்தபோது மதுரை மண்டலத்தைச் சுல்தான் கியாஸுத்தின் என்பவர் ஆண்டு வந்தார். அவர் விருந்தாளியாக வும் சில நாட்கள் இருந்துள்ளார். மதுரை, கீழக்கரை, நாகூர் போன்ற முக்கிய இடங்களில் தங்கி, தாம் கண்ட வை கேட்டவை யெல்லாம் நிரல்படத் தம் நூலில் விவரித்துள்ளார். அவை இன்று அரிய வரலாற்றுச் சான்றுகளாக விளங்குகின்றன.

விரிவாகப்

தாம் உலகப் பயணம் தொடங்கி 24 ஆண்டுகட்குப்பின், 1849ஆம் ஆண்டு நவம்பர் 8இல் மொராக்கோ தலைநக ரான பெஸ் நகரம் சென்றடைந்தார். மூன்றாண்டுகள் இடைவெளிக்குப்பின் மீண்டும் மேற்கு நோக்கித் தம் பயணத் தைத் தொடர்ந்தார். சஹாரா மற்றும் ஸ்பெயின் முதலான ஐரோப்பிய நாடு களில் சுற்றிவிட்டு 1354ஆம் ஆண்டு மீண்டும் தம் தாயகம் திரும்பினார்.

இவர் தாம் எழுதி வைத்திருந்த குறிப்புகள் அனைத்தையும் தம் அரசரி டம் ஒப்படைத்து, அவற்றை நூல் வ4 வில் வெளியிடுமாறு வேண்டினார். அவ் வாறு வெளிவந்த அந்தக் குறிப்புகள் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்

ட இ .

தம் எஞ்சிய காலத்தை இஸ்லாமிய மார்க்கத் திருப்பணியில் கழிக்கலா னார். நீண்டகாலம் காஜியாகப் பணி யாற்றி 1377 ஆம் ஆண்டில் மொரோக் காவில் காலமானார்.

ஒரு குறிப்பிட்ட காலத்தின் ஒட்டு

மொத்த உலகச் செய்திகளை இவரு டைய உலகப் பயணக் குறிப்புகளே

இப்னு n னா

தந்து வருகின்றன என்றால் அது மிகை யல்ல.

இப்னு லீனா அவிசென்னா' என இன்றும் உலகம் போற்றிவரும் இப்னு nனா ஆயிரம் ஆண்டு கட்கு முன்பு வாழ்ந்த மாபெரும் உலக மேதையா வார். இவர் அறிவியல் அறிஞரும் மருத் துவ மேதையும், தத்துவ வித்தகருமா வார்.

இப்னு nனாவின் இயற் பெயர் ஹ-லைன் என்பதாகும். இவருக்கு இப்னு ஸினா எனும் பெயர் எவ்வாறு ஏற்பட்டது எனத் தெரியவில்லை. இப்பெயரே இன்று மருவி 'அவி சென்னா' என ஆகியுள்ளது.

இப்னு nனா 980ஆம் ஆண்டில் பல்க் பகுதியில் உள்ள அஃப்ஷனா எனும் ஊரில் பிறந்தார். இவர் தந்தை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந் தார். சின்னஞ்சிறு வயதிலேயே அறிவுக் கூர்மை மிக்கவராக இருந்தார். பத்து வயதை எட்டுவதற்கு முன்னரே திருக் குர்ஆன் முழுமையும் இவருக்கு மனப் பாடம். பதினைந்து வயதை முடிக்கும் போது அரபிமொழிஇலக்கியம், இசை, தத்துவம், இஸ்லாமியச் சட்டதிட்டங் கள் எல்லாவற்றிலும் தக்க புலமைபெற் றார். கணிதம், வானவியல், மருத்து வம் முதலான அறிவியல் துறைகளிலும் தேர்ச்சி மிக்கவரானார்.

மருத்துவத் துறையில் தனி ஈடுபாடுள் ளவராகத் திகழ்ந்தார். பதினெட்டு வயதிற்குள்ளாகவே ம ரு த் து வ ப் பணியை மேற்கொள்ளலானார். நோ யாளிகளின் நோய்களைக் கண்டறிவதி லும், தக்க மருந்துகள் மூலம் அவற் றைப் போக்குவதிலும் திறமை மிக்க வராக விளங்கினார். இயன்றவரை இலவசமாக சிகிச்சை அளிப்பதிலேயே மகிழ்ச்சி கொண்டார்.