பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

பெருவாழ்வை அக்காலத்தில் மிகச் சிறந்த இஸ்லாமிய ஞானச் செல்வராக விளங்கிய சதக்கத்துல்லா அப்பா அவர் களிடம் கேட்டுத் தெரிந்து காப்பியம் படைக்குமாறு வேண்டினார்.

வள்ளல் சீதக்காதியின் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பிய உமறுப்புலவர் சதக்கத்துல்லா அப்பாவை அணுகி அண்ணல் (ஸல்) அவர்களின் வாழ்க் கையைக் கூறுமாறு கேட்டார். பிற சமயத்தவரைப் போல் உடையும் தோற்றமும் கொண்ட உமறுவுக்கு பெருமானார் வாழ்வைச் சொல்ல அப்பா மறுத்ததில் வியப்பில்லை. எனவே, அவரைத் திருப்பி அனுப்பி விட்டார். இதனால் உமறுப்புலவர் மிக வும் வருந்தினார். அன்றைய இரவில் இருவர் கனவிலும் பெருமானார் தோற்றமளித்துத் தம் வாழ்க்கை விப ரம் வழங்குமாறும், காப்பியம் படைக்கு மாறும் முறையே கூறி மறைந்தார். அதற்கிணங்க சதக்கத்துல்லா அப்பா பெருமானார் பெருவாழ்வை விவரிக்க உமறுப்புலவர் சீறாக் காப்பியமாக உரு வாக்கினார்.

சீறாக் காப்பியம் உருவாகும்போது அவருக்கு வேண்டிய பொருளுதவி களைச் செய்து வந்தார் வள்ளல் சீதக் காதி. சிறிது காலத்திற்குள் சீதக்காதி மறையவே பரங்கிப் பேட்டையில் வாழ்ந்த வள்ளல் அபுல்காசிம் மரைக் காயரின் உதவியோடு காப்பியத்தைத் தொடர்ந்து எழுதினார். இந் நன்றியை மறவாது அபுல் காசிமைத் தம் காப்பி யத்தில் பல இடங்களில் பாராட்டி யுள்ளார் உமறுப்புலவர்.

உமறுப்புலவர் தம் சீறாக் காப்பி யத்தை முழுமையாக எழுதிமுடிக்கும் முன், தம் 63ஆம் வயதில் எட்டைய புரத்தில் காலமானார். இவரது உடல்

உருது

இவரது தந்தையாரின் அடக்கவிடத் திற்கு அருகிலேயே அடக்கம் செய்யப் பட்டுள்ளது. அங்கு ஒரு நினைவிடமும் கட்டப்பட்டுள்ளது. அங்கு ஆண்டுதோ றும் கந்துாரியும் நடைபெற்று வருகிறது.

உருது: முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் உருவான மொழி உருது மொழியாகும். இம் மொழியின் தோற்றத்திற்கு முஸ்லிம் கள் காரணம் என்றாலும், இந்துக் களுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு. உருது எனும் சொல் துருக்கி மொழிச் சொல்லாகும். இதற்குப் 'படை முகாம் என்பது பொருளாகும்.

முகலாய மன்னர்களின் படைகளில் இடம்பெற்றிருந்த படைவீரர்கள் தத் தம் தாய்மொழிச் சாயலோடு அரசு மொழியான பாரசீக மொழியைப் பேசினர். இக்கலப்பு மொழியே நாள டைவில் தனி மொழியாக உருவெடுத் தது. எனவே தான், படை முகாம் களில் படை வீரர்கள் மொழி எனும் பொருளில் இது உர்து' எனும் பெய ரினைப் பெற்றது. உருது மொழியில் பாரசீக மொழிச் சொற்கள், அரபி மொழிச் சொற்கள், சமஸ்கிருதச் சொற்கள் பெரும்பான்மையும் மற்ற இந்திய மொழிகளின் சொற்கள் சிறு

பான்மையும் கலந்துள்ளன.

பேச்சு மொழியாகத் தொடங்கிய உருதுமொழி, தக்கான சுல்தான்களின் ஆட்சியின்போது ஒரு தனி மொழியாக வளமடைந்தது. அதே சமயம் உருது மொழி வடநாட்டில் 'பிரிஜ் பாஷா' என அழைக்கப்பட்டது. பதினான்காம் நூற்றாண்டில் உருது மொழியில் முதல் வசன நூல் உருவாக்கப்பட்டது. அதை எழுதியவர் ஸையித் முஹம்மது ஹ-ஸ்ைனி கேஸுதராஸ் என்பவரா

வார். இதே காலத்தில் வடநாட்டில்