பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஸ்லாலி இமாம் (ரஹ்): இஸ்லா பதிய மார்க்க மாமேதைகளில் தலை யாயவர் இமாம் (ரஹ்) அவர்கள். இவரது இயற்பெயர் அபூ ஹாமித் முஹம்மது அல் கஸ்ஸாலி என்பதாகும். கஸ்ஸாலி என்பது குடும் இவர் தந்தையார்

கஸ்லாலி

பப் பெயராகும். பெயர் முஹம்மது கியாமுத்தீன் என்ப

தாகும். இவர் நூற்புத் தொழில் செய்து வந்தவர். நூல் நூற்பவர் எனும் பொருள்படும், கஸ்ஸாலி

என்ற சொல்லால் இவர் குறிப்பிடப்

பட்டு வந்தார். அதுவே குடும்பப் பெயராக நாளடைவில் நிலைத்து விட்டது.

இவர் தந்தை கல்வியறிவு பெறாதவ ராக இருந்தார். இருப்பினும் தம் மக் கள் நன்கு கற்றுத் தேற வேண்டும் என விரும்பினார். இதற்காகப் பணமும் சேமித்தார். திடீரென தமக்கு இறப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்தார். தம் நண்பர் ஒருவரை அழைத்து, சேமித்த பணத்தை அவரிடம் தந்து, தம் இறப் புக்குப் பின்னர் தம் மக்களைப் படிக்க வைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண் டார். அவரும் ஒப்பினார். பின், தந்தை இறந்துவிடவே குழந்தைகள் இருவரும் அந்நண்பரின் பொறுப்பில் கற்று வந்தனர். படிப்புக்கென தாம் பெற்ற பணம் தீர்ந்தவுடன், அவர் கல்வி கஸ் லாலியையும், அவர் தம்பியையும் மத ரஸா ஒன்றில் சேர்த்து விட்டார்.அங்கு அவர்கள் இருவரும் நன்கு கல்வி கற்று வநதனர்.

மதரஸாவில் கல்வி கற்கும்போதே எதையும் மனப்பாடம் செய்யும் வழக் கம் கஸ்ஸாலிக்கு இருந்து வந்தது. மதர லாக் கல்வியை முடித்தபின், நீஷாப்பூர் எனுமிடத்தில் இருந்த நிலாமிய்யாக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். இவ ரது அறிவாற்றலையும், நினைவுத்திற

கஸ்ஸாலி

னையும், வாக்கு வன்மையையும் அறிந்த இவர் ஆசிரியர் இமாமுல் ஹரமைனி (ரஹ்) கஸ்ஸாலியைக் கல்லூரித் துணைப்பேராசிரியராக நியமித்தார். இவரது மார்க்க ஞான அறிவுத்திறன் இவர்கள் எழுத்தின் மூலமும் வெளிப் பட்டது. இவர்கள் புகழ் எங்கும் பரவி

யது.

இமாமுல் ஹரமைனியின் மறைவுக் குப் பின் இவரே நிலாமிய்யாக் கல்லூரி யின் தலைவரானார். அப்போது கஸ் ஸ்ாலி (ரஹ்) அவர்கட்கு வயது 34. இவ்வளவு இளம் வயதில் இவ்வுயர் பதவியைப் பெற்றதன் மூலம் இவர் புகழ் மேலும் உயர்ந்தது.

நாவன்மைமிக்க இவருடைய மார்க் கச் சொற்பொழிவுகள் அக்கால மேதைகள் பலராலும் பாராட்டப் பட்டன, அரசு உயர் அதிகாரிகளும், அமைச்சர்களும் இவரை மிகுந்த மதிப் புடன் நடத்தினர். இவர் ஒரு கலீஃபா போன்றே வாழ்ந்தார். இவரிடம் பாடம் கேட்க அரசு உயர் அதிகாரி களும், அமைச்சர்களும் ஆவலுற்றனர். அரசுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் இவர் பெரும் பங்கு கொண்டார்.

இவரின் மார்க்கச் சொற்பொழிவு

கள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட் டன. அவை மக்களிடையே ஒருவிதப் புத்தெழுச்சியை ஏற்படுத்தின.

எனினும், இத்தகைய வாழ்க்கையில் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது. உண் மையான மெய்ஞ்ஞான வாழ்வு வாழ விரும்பினார். இதற்காக இவர் துறவு மனப்பான்மையுடையவராய் கம்பளிப் போர்வையுடன், காலில் செருப்பு மின்றி பக்தாதைவிட்டு வெளியேறி னார். காடு, மலை, வனங்களையெல் லாம் கடந்து திமிஷ்க் போய்ச் சேர்ந் தார். அங்கு இரண்டாண்டு இறை