பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 105 ஆர்த்திகான் (Orthicon) : இன்று மேம்பாடு அடைந் துள்ள தொலைக்காட்சிக் காமிராவிலுள்ள ஒரு முக்கிய உறுப்பு: நல்ல படம் எடுப்பதற்கு இது மிகவும் இன்றியமையாத பகுதி யாகும். இமேஜ் ஆர்த்திகான் (Image orthicon): மேற்கூறிய ஆர்த்திகானைவிட மிகக் கூருணர்வுடைய ஒரு புதிய ஆர்த்தி கான் குழலாகும். விலாடிமஸ் ஸ்வாரிகன் என்ற இரஷ்ய அறிவியலறிஞர்புனைந்த ஓர் அற்புதக்குழல். இதனைக் கொண்டு மங்கிய ஒளியிலும் படம் எடுக்க முடியும். - உணர் கொம்பு (Antenna) : ஒலிபரப்பு, ஒளி பரப்பு நிலை யங்களில் அலைகளை நாலா புறங்களிலும் அனுப்பும் ஒர் அமைப்பு. ஊடகம் (Medium) : ஓர் அலை ஓரிடத்திலிருந்து பிறி தோரிடத்திற்குச் செல்லுவதற்கு வழியாக அமையும் பொருள். (எ-டு) ஒலி காற்று வழியாகவும், ஒளி வானி வழியாகவும் செல்லுகின்றன. காற்றும் வானியும் ஊடகங்கள். எதிர் மின்னனுக்கள் (Electrons) . மிக மிக நுண்ணிய ஒருவகை மின்துகள்கள்; எதிர் மின்னூட்டத்தைக் கொண் டவை. ஒரு கம்பியில் இவை தொடர்ந்து நகர்வதால்தான் மின்ளுேட்டம் உண்டாகின்றது. ஐகனுஸ்கோப்பு (iconoscope): தொலைக் காட்சிக் காமி ராவில் பயன்படும் முக்கிய குழல்களுள் ஒன்று. இதைத் தமிழில் உருவங்காட்டி என்று வழங்கலாம். ஒலிபெருக்கி (Loud speaker): பேசுவோரின் பேச் சொலியைத் தொலைவிலுள்ளோரும் செவிமடுக்கும் வண்ணம் பெருக்கிக் காட்டப் பயன்படும் ஒரு வகைச் சாதனம். இது மின்னுற்றலால் இயங்குகின்றது.